"மோடி" பெயரை குட்டி நகரத்திற்கு சூட்டிய இஸ்ரேல்.. இப்படியும் ஒரு ஆச்சரியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதலாவது இந்திய பிரதமர் என்று பெயர் ஈட்டியுள்ளார் நரேந்திர மோடி. ஆனால் பல வருடங்கள் முன்பே இஸ்ரேலின் ஒரு நகரத்திற்கு மோடி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து பலருக்கும் தெரியாது.

இஸ்ரேலில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஜெர்மனி சென்று ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கு பெற்றுள்ளார்.

மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அந்த நாட்டு பிரதமர் பிரதமர் நெதன்யாகு உற்சாக வரவேற்பளித்தார். மோடியும் நினைவு பரிசு வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

மோடி பெயர்

மோடி பெயர்

இந்த நிலையில், இஸ்ரேலில் ஒரு நகரின் பெயருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ள தகவல் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல் அவிவ்-விலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த நகரின் பெயர் மோடி'இன் (Modi'in).

வளரும் நகரம்

வளரும் நகரம்

இஸ்ரேலை சேர்ந்தவரும் இந்தியாவில் சுமார் ஆறு ஆண்டுகளாக வசிப்பவருமான ரப்பி அகிவா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறுகையில், "மோடி'இன் நகரம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மார்டன் சிட்டியாகும். மத்திய இஸ்ரேல் பகுதியில் இது அமைந்துள்ளது.

இந்தியாவை குறிக்கிறதா

இந்தியாவை குறிக்கிறதா

பிரதமர் மோடிக்கும், இஸ்ரேலிலுள்ள மோடி'இன் சிட்டிக்கும் தொடர்பு கிடையாது என்றபோதிலும், தற்செயலாக நிகழ்ந்த இந்த பெயர் ஒப்புமை வியக்க வைக்கிறது. மேலும், இன் என்ற பெயர் இந்தியாவை குறிக்கிறது போலும்" என்று சிரிக்கிறார் ரப்பி அகிவா.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

ரப்பி மேலும் கூறுகையில், இஸ்ரேலுக்கு வருகை தந்த முதலாவது இந்திய பிரதமர் என்ற வகையில் மோடியின் வருகையால் இஸ்ரேல் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார். இருப்பினும் மோடி இந்த நகருக்கு விஜயம் செய்யவில்லை. அவர் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகிய நகரங்களுக்கு மட்டுமே சென்றிருந்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நகரம்

ஆக்கிரமிக்கப்பட்ட நகரம்

மோடி'இன் என்ற நகர பெயருக்கு, வருங்கால நகரம் என்பது அர்த்தமாம். ஜோர்டான் நாட்டின் நிலப்பரப்பில் அமைந்திருந்த மோடி'இன் நகரை, 1967ம் ஆண்டுவாக்கில் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறுகிறது, விக்கிப்பீடியா தகவல்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Modi'in Maccabim Re'ut is a modern city, located in central Israel, about 35 km south-east of the capital, Tel Aviv.PM Modi wrapped up his three-day visit to Israel yesterday. Modi'in was not on his itinerary, with the prime minister visiting Tel Aviv and Haifa.
Please Wait while comments are loading...