மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ
டெல்அவிவ்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேலும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனி விமானத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
ஜோடியாக வரறே்ற நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புன்னகையுடன், மோடியை வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு புன்னகை தழும்ப பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கியபடி பேசினர்.
கட்டியணைக்க...
அதன்பிறகு நெதன்யாகுவின் மனைவி சாரா பிரதமர் மோடி அருகே வந்தார். மேற்கத்திய கலாசாரப்படி அவர் பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்க முயன்றார். ஆனால் மோடி சரியாக கவனிக்கவில்லை. அடுத்த நொடியில் பிரதமர் மோடி, சாராவிடம் கையை நீட்டினார். இருவரும் கைக்குலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.
காவி நிற உடை
அப்போது, ''எப்படி இருக்கிறீர்கள் சாரா' என்று மோடி உற்சாகத்துடன் நலம் விசாரித்தார். இந்த சமயத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயம் நடந்தது. பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா காவி நிறத்தில் ஆடை அணிந்திருந்தார். அதேபோல் பிரதமர் மோடி அணிந்திருந்த கோர்ட்டின் பாக்கெட்டில் ‛Packet Square' வைத்திருந்தார்.
மோடி சொன்ன கமெண்ட்
இதை கவனித்த நெதன்யாகு மோடியை பார்த்து, ''கவனிச்சீங்களா... நீங்கள் இருவரும் ஒரே நிறை உடையில் வந்து இருக்கிறீர்கள்'' என்று கூறினார். இதை கேட்டு சிரித்த மோடி,''ஆமாம்... ஆமாம்... நாங்கள் காவி நிறத்தில் வந்திருக்கிறோம்'' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Welcome to Israel my dear friend @narendramodi 🇮🇱🙏🇮🇳 pic.twitter.com/AnRtceD9Ci
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) February 25, 2026
பிரதமர் மோடி, பிரதமர் நெதன்யாகு இடையே இருக்கும் நட்பை பார்த்து இஸ்ரேல், இந்திய அதிகாரிகள் பூரித்து போனார்கள். இந்த வீடியோவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ‛வெல்கம் மை டியர் மோடி' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications