For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 'கர்ப்ப அறிகுறிகள்'

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: 2013ம் ஆண்டில் கூகுளில் அறிகுறிகள் குறித்து அதிகம் தேடப்பட்டது கர்ப்பத்தின் அறிகுறிகள் தான் என்று தெரிய வந்துள்ளது.

2013ம் ஆண்டில் மக்கள் கூகுளில் எந்தெந்த நோய் குறித்த அறிகுறிகள் குறித்து தேடினர் என்ற தகவல் சேகரிக்கப்பட்டது. அதில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் கர்ப்பத்தின் அறிகுறிகள் குறித்து அதிகம் கூகுள் செய்தது தெிய வந்துள்ளது.

தற்போது தான் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூகுளில் அதற்கான அறிகுறிகளை தேடிக் கண்டிபிடித்து நமக்கு இந்த பிரச்சனை தான் என்ற முடிவுக்கு வருகின்றனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய்க்கான அறிகுறிகளை பார்ப்போம்.

கர்ப்பம்

கர்ப்பம்

உலக மக்களில் ஏராளமானோர் கர்ப்பத்தின் அறிகுறிகள் என்னென்ன என்று கூகுள் செய்துள்ளனர். இது தான் 2013ம் ஆண்டில் கூகுளில் அறிகுறிகள் குறித்து அதிகம் தேடப்பட்டது ஆகும்.

காய்ச்சல்

காய்ச்சல்

பலர் காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம் செல்வதில்லை. கூகுள் செய்து அறிகுறிகளை பார்த்து அதற்கேற்ப தான் மருத்துவரிடம் செல்வதா இல்லை மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவதா என்று முடிவு செய்கிறார்கள். கர்ப்ப அறிகுறிகளை அடுத்து காய்ச்சலின் அறிகுறிகள் பற்றி தான் மக்கள் அதிகம் கூகுள் செய்துள்ளனர்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வருகிறது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட நோய் அறிகுறிகளில் சர்க்கரை நோய் அறிகுறிகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உளைச்சல்

உளைச்சல்

இன்றைய நவீன உலகில் உளைச்சல் இல்லாத ஆட்கள் மிகவும் குறைவு தான் என்றே கூற வேண்டும். பலர் கூகுளில் உளைச்சலின் அறிகுறிகளை தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

தைராய்டு

தைராய்டு

தைராய்டு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் தைராய்டின் அறிகுறிகள் குறித்தும் ஏராளமானோர் கூகுள் செய்துள்ளனர்.

ஹெச்ஐவி

ஹெச்ஐவி

எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் ஹெச்ஐவி குறித்தும் பலர் கூகுள் செய்துள்ளனர். ஹெச்ஐவி வைரஸ் தாக்கினால் வரும் அறிகுறிகள் குறித்து மக்கள் கூகுளில் தேடியுள்ளனர்.

மோனோநியூக்ளியோசிஸ்

மோனோநியூக்ளியோசிஸ்

வேகமாக பரவக்கூடிய மோனோநியூக்ளியோசிஸ் அல்லது கிஸ்ஸிங் நோய் இபிவி வைரஸால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் பற்றியும் பலர் கூகுகள் செய்திருக்கின்றனர்.

லூபஸ்

லூபஸ்

உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் லூபஸ் நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள ஏராளமானோர் கூகுளின் உதவியை நாடியுள்ளனர்.

ஹெர்பஸ்

ஹெர்பஸ்

வைரஸால் ஏற்படும் ஹெர்பஸ் நோயின் அறிகுறிகள் குறித்து உலக மக்களில் பலர் கூகுள் செய்துள்ளனர். நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் உள்ளது.

நிமோனியா

நிமோனியா

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவின் அறிகுறிகள் பற்றி மக்கள் கூகுளில் அலசி ஆராய்ந்துள்ளனர்.

English summary
Users searched for 'pregnancy symptoms' most on Google this year, as revealed by the search giant's annual list for the top-searched symptoms of 2013. The list indicated some of the most common illnesses as people continued to rely on the web information in lieu of human doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X