For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகரிக்கும் வலிமை- ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைப்பு

Google Oneindia Tamil News

அம்பாலா: பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு விட்டது அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள். இந்த விமானங்கள்
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட உள்ளன. 7 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து இந்தியாவிற்கு வரும் இந்த விமானங்கள் நாட்டின் விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும். எதிரி நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

Recommended Video

    Rafale Fighter Jet | France To India Travel | Oneindia Tamil

    கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.

    தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில்

    இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதியாகும்.

    ஏவுகணைகளை அனுப்ப முடியாது.. சீனாவிற்கு ஒரே அடியாக ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜிங்பிங்.. பின்னணி!ஏவுகணைகளை அனுப்ப முடியாது.. சீனாவிற்கு ஒரே அடியாக ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜிங்பிங்.. பின்னணி!

    10 விமானங்கள் தயார்

    10 விமானங்கள் தயார்

    இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜை செய்து விட்டு வந்தார். இதில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்ஸ் நாட்டிலேயே இருக்கும். மீதமுள்ள 5 விமானங்கள் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை தொடங்கின.

    அம்பாலாவிற்கு வரும் விமானங்கள்

    அம்பாலாவிற்கு வரும் விமானங்கள்

    தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தை இயக்குவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற இந்திய விமானப்படை அதிகாரிகள் நாளை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர். அம்பாலா விமானப்படை தளத்தில் இந்த விமானங்கள் இணைக்கப்பட உள்ளன. இந்த ஐந்து விமானங்கள் மே மாதம் இந்தியா வந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அது வரவில்லை.

    அதிநவீன போர் விமானம்

    அதிநவீன போர் விமானம்

    ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, அதிநவீன விமானமாக, அது விளங்கும். ரஃபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது. ரேடாரிலிருந்து தப்பக் கூடிய சிறப்பம்சம் கொண்டது ரஃபேல் போர் விமானங்கள்.

    இலக்குகளை குறி பார்த்து தாக்கும்

    இலக்குகளை குறி பார்த்து தாக்கும்

    வானிலிருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் இலக்கை குறிபார்த்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்க கூடிய ஏவுகணைகள் போன்றவை இதில் அடங்கும்.

    இந்திய விமானப்படையில் பலம் அதிகரிப்பு

    இந்திய விமானப்படையில் பலம் அதிகரிப்பு

    இந்த ஏவுகணைகளை ரஃபேல் விமானங்களில் பொருத்திக்கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்பதால் இந்திய விமானப்படை மிகவும் பலம் பொருந்திய விமான படையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் 5 போர் விமானங்கள் நாளை இந்தியா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Rafale jets reaching Ambala airbase tomorrow. Rafale jets have been specially tailored for the IAF.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X