For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெட் சல்யூட் காஸ்ட்ரோ.. போய் வா போராளியே!

மறைந்த கியூப புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நான் ஒரு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட். கடைசி வரை அப்படித்தான் இருப்பேன் என்று கூறி அதை கடைசி வரை கடைப்பிடித்த தூய போராளி காஸ்ட்ரோ.

எந்த நெருக்கடிக்கும் அஞ்சாமல், எந்த மிரட்டலுக்கும் பணியாமல், தன் மக்களுக்காக கொண்ட கொள்கையில் கடைசி வரை விடாப்பிடியாக இருந்த ஒரே மாபெரும் தலைவர் காஸ்ட்ரோதான்.

Red Salute Fidel!

உலகப் பெரும் போராளிகள் பலருக்கும் ஆதர்ச சக்திகளாக இருந்தவர்கள் சே குவராவும், அவரது உற்ற தோழன் காஸ்ட்ரோவும்தான். இன்று காஸ்ட்ரோவையும் உலகம் இழந்து நிற்கிறது.

காஸ்ட்ரோவின் வார்த்தைகளிலிருந்து சில...

  • சோசலிசம் தோற்று விட்டதாக பேசுகிறார்கள். அப்படியானால் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளதா.. அவர்கள் பதிலளிக்கட்டும்.
  • முதலாளித்துவம் அசிங்கமானது, மக்களை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. இது போருக்கும், அழிவுக்கும், போட்டிகளுக்கும் மட்டுமே வழி வகுக்கிறது.
  • ஒரு மனிதன் அவனது அந்திமக் காலத்தையும் தாண்டிச் செல்லும்போது அவனது வாழ்க்கை முடிந்து விட வேண்டும் என்பதே எனது கருத்து.
  • தலைவிதியை நிர்ணயிப்பது மனிதன் அல்ல. விதிதான் ஒரு மனிதனை அந்தந்த நேரத்துக்கு ஏற்ப செதுக்குகிறது.
Red Salute Fidel!
  • இங்கு திருடர்கள் இல்லை, இங்கு துரோகிகள் இல்லை, இங்கு ஊடுறுவல்காரர்கள் இல்லை.. இதுதான் உண்மையான புரட்சி.
  • 82 பேருடன் நான் புரட்சியைத் தொடங்கினேன். இன்று நான் மீண்டும் அதைச் செய்ய வேண்டி வந்தால் எனக்கு 10 அல்லது 15 பேர் போதும். ஆட்கள் எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. நம்பிக்கையும், திட்டமும், செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
  • யூதர்களைப் போல உலகைச் சுரண்டியவர்கள் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை.
  • நான் ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட். கடைசி வரை அப்படியேதான் இருப்பேன்.
English summary
Legendary leader Fidel Castro has left a big void in Cuba. Some of his famous quotes are listed here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X