For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவு-பகல் ஷிப்ட்டுகளில் மாறி வேலைபார்த்தால் இதயம், நுரையீரல் பாதிக்கும்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இரவு மற்றும் பகல் நேர ஷிப்டுகளில் மாற்றி மாற்றி பணி செய்யும் ஆம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு இதய பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வார்ட் மெடிக்கல் பள்ளியின், மருந்தியல் துறை பேராசிரியர், ஈவா ஸ்கெர்ன்ஹாமர் கூறியுள்ளார். அவர் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கருத்தில் வைக்க வேண்டிய விஷயம் இதுவாகும்.

இறப்பு விகிதம் அதிகம்

இறப்பு விகிதம் அதிகம்

பேராசிரியர் ஈவா நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போமா: இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல தூக்கம் அவசியம். ஆனால் ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும்போது தூக்கம் கெட்டுவிடும். கடந்த 22 வருடங்களாக 75 ஆயிரம் நர்சுகளின் வாழ்க்கை முறை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், பிறரை காட்டிலும், ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் பெண்களின் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

5 ஆண்டுக்கு இதயம், 15 வருடத்திற்கு நுரையீரல்

5 ஆண்டுக்கு இதயம், 15 வருடத்திற்கு நுரையீரல்

ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது, இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாற்றிக் கொண்டே இருக்கும் பெண்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு 19 முதல் 23 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாகவும், 15 ஆண்டுகளாக இவ்வாறு மாற்றிக் கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் வரை அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தூக்கம் முக்கியம் பாஸ்

தூக்கம் முக்கியம் பாஸ்

இதன்மூலம், தூக்கத்திற்கும், மனித உடலுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், பெண் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான ஈவா.

இதழில் கவுரவம்

இதழில் கவுரவம்

ஈவாவின் ஆய்வு கட்டுரை அமெரிக்க மருத்துவ இதழிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது உடலையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று எச்சரிக்கிறது இவரது ஆய்வு.

English summary
Rotating night shift work deteriorates health in general, enhances the development of lung cancer and cardiovascular disease (CVD), and contributes to higher mortality, new research has confirmed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X