என்னாச்சு.. "திடீர் திடீருன்னு உருளுதாம்.." உக்ரைன் எல்லையில் மாற்றம்.. படைகளை குறைத்த ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைன்- ரஷ்யா பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படையினரில் சிலரை ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளது.
Recommended Video
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால், இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளன. இது நாளுக்கு நாள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியது. இதனால் மிகப்பெரிய பதற்றம் நிலவியுள்ளது.

ரஷ்யப் படை
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்று கருதப்பட்ட நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த தனது படைகளில் சிலவற்றை பாசறைக்குத் திரும்புமாறு ரஷ்ய ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படையினர் தங்களது தளங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

சோவியத் யூனியன்
ரஷ்யா மற்றும் உக்ரைன் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தன. அதன்பிறகு 1991-ல் உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. உக்ரைன் தனிநாடான பின்னரும், அதன்மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது ரஷ்யா. இதுதான் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தது. இதையடுத்து உக்ரைன் நாடு NATO-வில் இணைய திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றி தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ரஷ்யா. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்ய எல்லையில் பதற்றம் நீடித்துவருகிறது. இந்நிலையில், உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களைக் குவித்தது ரஷ்யா. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

வாபஸ்
இந்த நிலையில் திடீரென உக்ரைன் எல்லைப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த தனது படையினரில் சிலரை பாசறைகளுக்குத் திரும்ப ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு ராணுவ பிரிவுகளைச் சேர்ந்த படையினருக்கான வேலைகள் முடிந்ததால் அவர்கள் தங்களது பாசறைக்குத் திரும்பி வருகின்றனர். ரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் அவர்கள் திரும்பி வருகின்றனர் என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செய்துள்ளார்.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications