For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு... ஹிலரி க்ளிண்டன் குற்றச்சாட்டு

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் தேர்தல் நடவடிக்கையில் எதிரி நாடு தலையிடுகிறது. மிகத் தீவிரமான பிரச்னையை நாம் எதிர்நோக்கியுள்ளோம். ஜனநாயகக் கட்சி இணையதளத்தில் அந்த நாடு ஊடுருவியுள்ளது. இந்த நிலையில், ரஷியா மேலும் ஊடுருவலில் ஈடுபட வேண்டும் என்கிற தொனியில் நம் நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றின் வேட்பாளர் கூறி வருகிறார்," என்று ஹிலாரி குற்றம் சாட்டினார்.

Russian interference in US presidential election

அவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை மறைமுகமாகக் குறிப்பிட்டதை உணர்ந்த செய்தியாளர்கள், தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்ய ரஷியா முயற்சி செய்கிறதா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஹிலாரி, "குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த ஊடுருவல் நடவடிக்கை ஆரம்பித்தது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ரஷிய அதிபர் புதினின் கொள்கைகளுக்குத் தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடுகிறது என்கிற புகார் உளவுத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நமது ஜனநாயக முறையிலான தேர்தலில் ரஷியத் தலையீட்டுக்கான வாய்ப்பு உள்ளது என்பது கவலையளிப்பதாக உள்ளது," என்றார்.

English summary
US Presidential candidate Hillary Clinton has alleged that Russia is interfering in elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X