For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்ய படைக்கு என்னாச்சு? 8 பேரை லைனில் நிற்க வைத்து.. புடின் எடுத்த "ஆக்சன்".. பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் முன்னேற முடியாமல் திணறி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் இரண்டு வாரமாக போர் தொடுத்து வருகிறது. ஆனாலும் ஏற்கனவே ரஷ்யாவிற்கு ஆதரவு இருக்கும் சில பகுதிகளை தவிர பெரிதாக வேறு எங்கும் ரஷ்ய படைகள் முன்னேற்றம் அடையவில்லை.

அதோடு ரஷ்ய தரப்பில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போர் நீண்டு கொண்டே இருப்பதால் ரஷ்ய தரப்பிற்கு சேதங்கள் அதிகரித்து வருகின்றன.

உக்ரைன் போருக்கு இடையே.. பாக் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை?.. பாக் குற்றச்சாட்டு! என்ன நடந்தது? உக்ரைன் போருக்கு இடையே.. பாக் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை?.. பாக் குற்றச்சாட்டு! என்ன நடந்தது?

ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா உக்ரைன்

உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை முழுமையான படைகளை பயன்படுத்தவில்லை.முக்கியமாக விமானப்படையை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை. விமானப்படை இல்லாத காரணத்தால் தரைப்படை தாக்குதல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தரைப்படை முன்னோக்கி செல்வதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தரைப்படை வீரர்களுக்கும் போதிய ஆயுதங்கள், எரிபொருட்கள் இல்லை. இதனால் ரஷ்ய ராணுவம் முன்னோக்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெற்றி

வெற்றி

இதனால்தான் இரண்டு வாரமாக நடைபெற்று வரும் போரில் பெரிய அளவில் ரஷ்யாவால் வெற்றியை பெற முடியவில்லை. பெரிய அளவில் ரஷ்யாவால் முன்னேற முடியவில்லை. அதிலும் உக்ரைன் தலைநகர் கீவ் வெளியே ரஷ்ய படைகள் காத்து இருக்கின்றன. போதிய எரிபொருள் இல்லாமல் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்யாவின் பீரங்கிகள் அணி வகுத்து நிற்கின்றன. இவர்கள் எரிபொருளுக்காக காத்து இருக்கின்றனர்.

தோல்வி

தோல்வி

இப்படி பெரிய படைகள் இருந்தும் ரஷ்யா போரில் கொஞ்சம் பின் தங்கி உள்ளதால் ரஷ்ய அதிபர் புடின் கடும் கோபத்தில் இருக்கிறாராம். இவர் இதனால் தனது நாட்டு ராணுவ படையின் மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருப்பதாக தி நியூயார்க் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சக செயலாளர் டானிலாவ் இந்த தகவலை நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

புடின் விரக்தி

புடின் விரக்தி

அதில், ரஷ்ய அதிபர் புடின் விரக்தியில் இருக்கிறார். பிளான் சரியாக செல்லவில்லை. ரஷ்ய வீரர்கள் பலியாகி வருகிறார்கள் என்ற கோபத்தில் இருக்கிறார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை வீரர்கள் சரியாக முடிக்கவில்லை என்ற கோபம் புடினுக்கு உள்ளது. இதனால் 8 ராணுவ ஜெனரல்களை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பதவியில் இருந்து நீக்கம்

பதவியில் இருந்து நீக்கம்

அதோடு இவர்களை பதவியில் இருந்தும் நீக்கி உள்ளார். அதோடு புதிய ஜெனரல்களை அவர் நியமனம் செய்துள்ளார். அவர் கோபத்தில் இருக்கிறார். ரஷ்ய ராணுவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. அவர்கள் வெற்றியை பெற முடியவில்லையே என்ற விரக்தியில் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

புடின் மனநிலை

புடின் மனநிலை

அதோடு இவர், புடினின் மனநிலை எப்படி இருக்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது. அவர் சரியான மனநிலையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அதேபோல் அவர் தன்னை உலக நாடுகள் அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறார். அவர் பிரம்மையில் இருப்பது போன்று எனக்கு தோன்றுகிறது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Russian president Putin fires 8 generals as the force could not win yet in Ukraine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X