For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசியாவின் பிரபலங்கள்: 2வது இடத்தில் சோனியா, 66வது இடத்தில் ரஜினி, 99வது இடத்தில் டோனி...

Google Oneindia Tamil News

லண்டன்: 2014ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் வாழும் செல்வாக்கு மிகுந்தவர்கள் குறித்து இங்கிலாந்து அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபர் பால் சகூவால் நிறுவப்பட்டது 'ஆசியன் அவார்ட்ஸ்' என்ற அமைப்பு. இந்த அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுதோறும் தலைசிறந்த 100 ஆசியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்ளுக்கு விருது வழங்கி கவுரப்படுத்துகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த ஆசியர்கள் பற்றிய பட்டியலை கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ளது ஆசியன் அவார்ட்ஸ்.

முதலிடத்தில் சீனா...

முதலிடத்தில் சீனா...

இந்தாண்டிற்கான பட்டியலில் சீன அதிபர் சீ ஜின்பிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாமிடத்தில் சோனியா....

இரண்டாமிடத்தில் சோனியா....

அதற்கு அடுத்த இடத்தில் அதாவது இரண்டாவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தேர்வாகியுள்ளார்.

பிரதமர் வேட்பாளர்கள்...

பிரதமர் வேட்பாளர்கள்...

அதனைத் தொடர்ந்து பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4-வது இடத்தையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

6வது இடத்தில் பிரதமர்...

6வது இடத்தில் பிரதமர்...

இந்தப் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அம்பானிக்கு 21வது இடம்...

அம்பானிக்கு 21வது இடம்...

இவர்கள் தவிர மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 11வது இடத்தையும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 19வது இடத்தையும், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி 21வது இடத்தையும், லஷ்மி மிட்டல் 36வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

46வது இடத்தில் ஹசாரே....

46வது இடத்தில் ஹசாரே....

மேலும், இந்தப் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 44வது இடத்திலும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே 46வது இடத்திலும், பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் 52வது இடத்திலும் உள்ளனர்.

ரஜினிக்கு 66வது இடம்....

ரஜினிக்கு 66வது இடம்....

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்தப் பட்டியலில் சினிமா பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, இந்தப் பட்டியலில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 63-வது இடத்திலும், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

84வது இடத்தில் ஐஸ்...

84வது இடத்தில் ஐஸ்...

மேலும், இந்தப் பட்டியலில் நடிகர் அமீர்கான் 68வது இடமும், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 84வது இடமும், நடிகர் சல்மான்கான் 98வது இடமும் கிடைத்துள்ளது.

சதத்தை தவற விட்ட டோனி...

சதத்தை தவற விட்ட டோனி...

அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 76வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி 99வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆஸ்கார் நாயகன்...

ஆஸ்கார் நாயகன்...

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பட்டியலில் 95வது இடத்தை பிடித்துள்ளார்.

ராஜபக்சேவுக்கு 34-வது இடம்...

ராஜபக்சேவுக்கு 34-வது இடம்...

இந்தப் பட்டியலில் ஐ.நா. தலைவர் பான் கி மூன் 8வது இடத்திலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 22 வது இடத்திலும், இலங்கை அதிபர் ராஜபக்சே 34-வது இடத்திலும் உள்ளனர்.

English summary
The 4th Asian Awards Top 100 was launched on April 4th 2014. While southern actor, Superstar Rajinikanth is among the top 100, placed at the 63rd spot, one place ahead of retired Indian batting mastero Sachin Tendulkar, the mozart of Madras, AR Rahman is placed in the 95th spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X