For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவிட்டர் தகவல்களை உளவு பார்த்த மாஜி ஊழியர்கள்.. சிஐஏ தலைவருடன் சவுதி மன்னர் பேச்சு

Google Oneindia Tamil News

ரியாத் : சவுதி அரேபிய அரசுக்காக டிவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு மன்னர் சல்மான் அமெரிக்க புலனாய்வு முகமையின் இயக்குநருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ரியாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, மன்னர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சவுதி அரேபியாவில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த குற்றச்சாட்டும் கவனத்தை பெற்றுள்ளது.

காலையிலேயே வீட்டுக்கு சென்ற மோடி, அமித் ஷா.. அத்வானிக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி வாழ்த்துகாலையிலேயே வீட்டுக்கு சென்ற மோடி, அமித் ஷா.. அத்வானிக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி வாழ்த்து

சவுதியை சேர்ந்த 2 பேர்மீது குற்றச்சாட்டு

சவுதியை சேர்ந்த 2 பேர்மீது குற்றச்சாட்டு

சவுதியை சேர்ந்த இருவர் உள்பட மூவர், டிவிட்டரின் தகவல்களை திருடி சவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்ததாக அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை

பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை

சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றுள்ள டிவிட்டர் தகவல்கள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சவுதி மன்னர் சல்மான் அமெரிக்க புலனாய்வு முகமையின் இயக்குநர் ஜினா ஹாஸ்பல்லுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர் கசோகி படுகொலை உள்ளிட்ட இரு நாட்டிற்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சவுதியின் பத்திரிகை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

புலனாய்வு தலைவரும் பங்கேற்பு

புலனாய்வு தலைவரும் பங்கேற்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரின்ஸ் பைசல் பின் பர்ஹான் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் காலித் அல்-உமைதான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

சட்டத்தின் முன்பு யாரும் தப்ப முடியாது

சட்டத்தின் முன்பு யாரும் தப்ப முடியாது

டிவிட்டர் உளவு விவகாரம் குறித்த குற்றச்சாட்டை சவுதி அரசு இன்னும் பார்க்கவில்லை என்றும், அதை பார்த்தபின்பு அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சவுதியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்தின்முன்பு யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்கட்டை சந்தித்துள்ள சவுதி

இக்கட்டை சந்தித்துள்ள சவுதி

ஏற்கனவே கசோகி படுகொலை விவகாரத்தில் மன்னர் குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளதாக அமெரிக்க புலனாய்வு முகமை குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டிவிட்டர் தகவல்கள் திருட்டு விவகாரமும் சவுதி அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தெரிவிக்குமா சவுதி அரசு?

தகவல் தெரிவிக்குமா சவுதி அரசு?

டிவிட்டரின் தகவல்கள் குறித்து உளவு கூறியதாக டிவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்ட மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் சவுதியில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Saudi king meets CIA chief discuss about twitter charges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X