For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்புடன் செல்ஃபி எடுத்து ரூ.96 லட்சம் ஹாஸ்பிடல் பில் கட்டிய அமெரிக்கர்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: விஷப் பாம்புடன் செல்ஃபி எடுக்கையில் அது கடித்ததால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.96 லட்சத்து 16 ஆயிரத்து 275 செலவு செய்துள்ளார்.

உலக மக்கள் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறார்கள். மலை உச்சி, பாலங்கள், அருவி உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்கையில் பலர் கால் தவறி விழுந்து பலியான சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒருவர் செல்ஃபி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Selfie With Rattlesnake Costs Man Over $150,000

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டீகோ நகரைச் சேர்ந்தவர் பாஸ்லர். அவர் புதர் ஒன்றில் இருந்த விஷப்பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அந்த பாம்பு பாஸ்லரை கடித்துவிட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷம் ஏறிய அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.ரூ.96 லட்சத்து 16 ஆயிரத்து 275 செலவு ஆகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

பாம்பு கடித்ததும் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. விஷத்தால் என் உடம்பு செயல் இழந்துவிட்டது. என் நாக்கு வெளியே வந்துவிட்டது. கண் சொருகிக் கொண்டது என்றார்.

இத்தனை நாட்களாக பாம்பு ஒன்றை வளர்த்து வந்த அவர் தற்போது அதை காட்டில் விட்டுள்ளார்.

English summary
Bit by a rattlesnake while taking a selfie with it, a man from San Diego faces a hospital bill of over $150,000 for treatment, a media report said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X