கொலராடோ.. வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி, பலர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கொலராடோ மாகாணத்தின் தோர்ண்டன் நகரில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் காயமடைந்து விட்டதாக அமெரிக்கக் காவல்துறையினர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Shooting At Walmart In Colorado: 2 Men Dead, 1 Woman Rushed To Hospital

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 2 பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தீவிரவாத சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்றைய தினம் நியூயார்க் நகரில் நடந்து சென்றவர்கள் மீது தீவிரவாதி ஒருவன் டிரக்கை மோதிய சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two men are dead and a woman was rushed to the hospital after reports of a shooting in a Walmart roughly ten miles north of downtown Denver.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற