For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை தெரிஞ்சது ஒரு குத்தமா? ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்!

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆடை காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆடை காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நேற்று பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த போது அங்கு பத்திரிக்கையாளர்கள் இருக்கும் பகுதியில், ஏபிசி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் பேட்ரிகா கார்வெலஸும் வந்து அமர்ந்தார்.

ஆனால் அவரை உடனே அங்கிருந்த அதிகாரிகள் வெளியே செல்லும்படி ஆணையிட்டனர். பின் பாதுகாவலர்கள் உதவியுடன் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

வெளியேற கூறினார்கள்

வெளியேற கூறினார்கள்

பேட்ரிகா கார்வெலஸுக்கு அருகே வந்த பாராளுமன்ற பணியாளர் நீங்கள் அணிந்து இருக்கும் உடை முறையாக இல்லை. அதனால் நீங்கள் வெளியேறலாம் என்று கூறினார். அந்த பத்திரிகையாளர் கைகளை மறைக்காத ஸ்லீவ் லெஸ் உடைகளை உடுத்தி இருந்தார் என்று கூறப்படுகிறது.

வெளியிட்டார்

இந்த பிரச்சனையை தொடர்ந்து வெளியே வந்த பத்திரிகையாளர் தன்னை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டார். நான் இந்த உடை அணிந்து இருந்ததால் வெளியே அனுப்பப்பட்டேன் என்று அதுகுறித்து அவர் டிவிட் செய்து இருந்தார்.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இது தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. என்ன மாதிரியான உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று எல்லோரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள். சிலர் ஸ்லீவ் லெஸ் அணிவதில் என்ன தவறு, இதற்கு எல்லாமா வெளியே அனுப்புவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

வைரலானது

இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. இதனால் தற்போது டிவிட்டரில் #ShowUsSomeArm எங்களிடம் கொஞ்சம் கைகளை காட்டுங்கள் என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் பெண்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். பெண்கள் தங்கள் கைகளை புகைப்படம் எடுத்து அதில் பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
ShowUsSomeArm: Right to bare arms moment started in Australia after parliament issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X