For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்!

Google Oneindia Tamil News

ஹாங்காங்: ஆசிய கண்டத்தில் இந்தியா, சீனாவுக்கு பிறகு கொரோனாவால் அதிகம் பாதித்த நாடாக மாறியுள்ளது சிங்கப்பூர்.

Recommended Video

    கொரோனாவின் Hotspot வுகானில் முதல் முறையாக ஜீரோ-வான எண்ணிக்கை

    கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இதனால் உலகளவில் 2 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். எனினும் இதற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதன் தாக்கத்தை இன்னும் குறைக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

    Singapore becomes Asias most infected nation

    உலகின் மொத்தம் 50 நாடுகளில் 6,300 இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிங்கப்பூரில் இந்தியர்கள் கொரோனாவால் மோசமாக பாதித்துள்ளனர். இங்கு கொரோனாவால் நேற்று மட்டும் 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுள் 15 பேர் மட்டுமே சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிநாட்டினர். சிங்கப்பூரில் கொரோனாவால் இந்தியர்கள் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிங்கப்பூரில் மேலும் 799 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதாவது கொரோனா பாதிப்பில் ஜப்பானை ஓவர்டேக் செய்துள்ளது சிங்கப்பூர்.

    ஆசிய கண்டத்தில் சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக சிங்கப்பூரில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. உலகின் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சீனாவும், இந்தியாவும் கொரோனா பாதிப்பில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவது அந்நாட்டினரை கவலையடையச் செய்துள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்

    நியூயார்க் நகரை விட மிகச் சிறிய நாடு சிங்கப்பூரில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இங்கு ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

    English summary
    Island Nation Singapore becomes Asia's most infected nation than China and India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X