For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்வேறு சாமான்களை எடுத்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்குக் கிளம்பியது பால்கன் 9!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்தின் பால்கன் 9 விண்வெளி ஓடம் அமெரிக்காவின் புளோரிடா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

செவ்வாய் கிழமை 7:04 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெஸ் எக்ஸ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வது இது 5வது முறையாகும்.

ரஷ்யாவின் “சோயுஸ்” ஓடம்:

ரஷ்யாவின் “சோயுஸ்” ஓடம்:

அமெரிக்காவின் விண்வெளி ஓடங்களான டிஸ்கவரி, கொலம்பியா போன்றவற்றிற்கு 2010 இல் ஓய்வு அளிக்கப்பட்ட பிறகு ரஷ்யாவின் சோயுஸ் விண் ஓடத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை அமெரிக்காவுக்கு உருவானது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:

இந்நிலையில் 2010 இல் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம், அமெரிக்காவின் பொருட்களை விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

சொந்த மண்ணிலிருந்தே:

சொந்த மண்ணிலிருந்தே:

இதன் மூலம் அமெரிக்கா தனது பொருட்களையும், தனது வீரர்களுக்குத் தேவையானதையும் தனது நாட்டைச் சேர்ந்த ராக்கெட் மூலமே விண்வெளி மையத்திற்கு அனுப்பும் வசதி கிடைத்தது.

42 ஆயிரம் கோடி ரூபாய்:

42 ஆயிரம் கோடி ரூபாய்:

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்கும் ஆறு வீரர்களுக்கு தேவையான 2300 கிலோ பொருட்களை சுமந்து கொண்டு சென்ற ஸ்பேஸ்க் எக்ஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக ஒரு விண்வெளி ஓடம் தயாரிக்க 42 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா சமீபத்தில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்கின் நிறுவனம்:

எலோன் மஸ்கின் நிறுவனம்:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்நெட் தொழிலதிபர் எலோன் மஸ்க் நடத்தி வருகிறார்.

English summary
The private ship’s flight will take about 5,000 pounds of supplies to the astronauts aboard the International Space Station, including a 3-D printer — the technology of which could provide a means for creating spare parts in the future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X