For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபெட்னா தமிழ் விழாவில் பங்கேற்கும் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

By Siva
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015ஐ வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலிபோர்னியாவில் நடக்கின்றது. இந்த விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தமிழ் மக்களால் மாபெரும் பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லலுற்றுவரும் தமிழ் உறவுகளுக்கு தன்னால் முடிந்த அளவில் அரவணைப்பு காட்டி நல்லாட்சி செய்து வரும் இவர், அண்மையில் 2009-ம் ஆண்டு வன்னியில் நடந்தது ஒரு திட்டமிட்ட தமிழின படுகொலை தான் என்று வட மாநில மக்களவையில் தீர்மானம் இயற்றி தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரு புத்துணர்வையும், நம்பிக்கையும் ஊட்டியுள்ளார்.

Sri Lanka's North Province CM to attend Fetna Tamil Vizha

"அமெரிக்கத் தமிழர் முன்னோடி" விருதுகள்

வட அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழ் சமூகம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது சீரிய பங்கினை ஆற்றி வந்திருக்கின்றது. பல தமிழர்கள் தங்களது துறைகளில் தலைமையிடத்தை அடைந்து சிறப்புப் பெற்றுள்ளனர். அவ்வாறான முன்னோடிகளை சிறப்பிக்கவும், அவர்கள் நம் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாகத் திகழவும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதுகளை (Tamil American Pioneer Award)

வழங்கி வருகிறது. அவ்வகையில் 2015ஆம் ஆண்டின் விருதுகளை, ஜூலை மூன்றாம் நாள் மதியம் பெறப்போகும் தமிழ் முன்னோடிகள் விவரம் வருமாறு,

1. முனைவர் ரங்கசுவாமி ஸ்ரீநிவாசன், கண்டுபிடிப்பாளர். இவர் லேசர் ஒளியினைக் கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்யும் முறையினைக் கண்டுபிடித்தவர். http://en.wikipedia.org/wiki/Rangaswamy_Srinivasan

2. திரு. கிருஷ்ணன் சுதந்திரன், தொழில் அதிபர் - டீம் பெஸ்ட் நிறுவனத்தின் தலைவர். http://en.wikipedia.org/wiki/Krishnan_Suthanthiran

3. முனைவர் முத்துலிங்கம் சஞ்சயன், இயற்கை அறிவியலாளர் , http://en.wikipedia.org/wiki/M._Sanjayan

4. பேராசிரியர் சேதுராமன் பஞ்சநாதன், கணிப்பொறியியல், http://en.wikipedia.org/wiki/Sethuraman_Panchanathan

5. பேராசிரியர் ப்ரியம்வதா நடராஜன், வானியற்பியல், யேல் பல்கலைக்கழகம். http://www.astro.yale.edu/priya/

6. மருத்துவர் ராமநாதன் ராஜூ, மருத்துவம். http://www.nycpm.edu/newsEvents/commencement2014.pdf

7. திரு. பி பீமன், இசைக் கலைஞர்,http://en.wikipedia.org/wiki/Bhi_Bhiman

8. அகிலன் அருளானந்தம், பேராசிரியர் மற்றும் வழக்குறைஞர், http://www.law.uci.edu/faculty/lecturers/arulanantham/

போட்டிகள்

விழாவின்போது திருக்குற்ள் தேனீ, குறும்படம், கருத்துக்களம், இலக்கிய வினாடி வினா, சதுரங்கம், சிறு கதை, புகைப்படம், ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றது என்பது

குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister of Sri Lanka's Northern Province, C.V. Wigneswaran will be the chief guest in FETNA Tamil Vizha to be held in California from july 3-5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X