For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: ஐ.நாவில் அன்புமணி ராமதாஸ் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Statement at Human Rights Council in Geneva today - Dr. Anbumani Ramadoss,
ஜெனிவா: இலங்கையில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் கலந்து கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:

தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தடை செய்துகொள்ளாவிட்டால் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் எவ்வித சிகிச்சையையும் பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை என சுட்டிக்காட்டி உள்ள அவர், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மூர்க்கத்தனத்தையே இது காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

English summary
Pasumai Thaayagam condemns all forms of racism and related intolerance. There are many repercussions of racism, ranging from the daily oppression of an intolerant society, to outright genocide. Unfortunately, the latter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X