துருக்கி, கிரீக் தீவை உலுக்கிய சக்தி வாய்ந்த பூகம்பம்.. 2 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏதென்ஸ்: 6.7 ரிக்டெர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் கிரீக் தீவுகளை உலுக்கியுள்ளது. கிரீக் தீவுகளில் உள்ள கோஸ் தீவு கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள கிரீக் தீவுகளுக்கு உட்பட்ட கோஸ் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Strong earthquake hits Greek islands, 2 dead

நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் பீதியடைந்த பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இடுபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ராணுவம் விரைந்துள்ளது. மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல், ஏதென்சிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள கிரீஸ் நாட்டிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் கட்டிடங்கள் குலுங்கின பல வீடுகளில் மின் இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் உடைந்தன. கேஸ் பைப் இணைப்புகளும் நொறுங்கிவிட்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிகின்றன.

கிரீக் தீவுகளின் லெஸ்போஸ், சியாஸ் மற்றும் ஏஜியன் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நில நடுக்கத்தில் கடும் சேதமும் உயிர் பலியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least two persons have died after a 6.7 magnitude hit the Greek islands and the Turkish coast. The US Geological Survey recorded a 6.7 magnitude quake off the south west coast close to the resort town of Bodrum and the Greek Island of Kos.
Please Wait while comments are loading...