ஆப்கன் நிர்வாகத்தை மாற்றிய தாலிபான்கள்.. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்கள் நியமனம்
காபூல்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் அரியணை ஏறியுள்ள தாலிபான்கள், அரசின் முக்கிய பதவியிடங்களை நிரப்பத் தொடங்கியுள்ளனர்.
ஆம்.. நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியிடங்களுக்கு நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தாலிபான்கள்.
குல் ஆகா என்பவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சதர் இப்ராகிம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கான் ஊடக செய்திகள் இதை தெரிவித்துள்ளன.

உளவுத்துறை, கவர்னர், மேயர் பதவியிடங்கள்
நாட்டின் உளவுத்துறை தலைவராக நஜிபுல்லா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லா ஷிரின் காபூலின் புதிய கவர்னர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹம்துல்லா நோமானி காபூல் நகர மேயராக பணியாற்றுவார்.

பொது மன்னிப்பு
முன்னதாக ஆகஸ்ட் 17 அன்று, அதாவது காபூலை கைப்பற்றிய இரு நாட்களுக்கு பிறகு, தாலிபான்கள் அனைத்து ஆப்கன் அரசு அதிகாரிகளுக்கும் "பொது மன்னிப்பு" வழங்குவதாக அறிவித்தனர். "அனைவருக்கும் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது... எனவே நீங்கள் உங்கள் வழக்கமான வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும்" என்று தாலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இயல்பு நிலை
இதனிடையே, காபூலில் உள்ள பத்திரிகையாளர்கள் கூறும் தகவல்கள்படி, காபூலில் வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறதாம். கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

களத்தில் பத்திரிக்கையாளர்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பிற தூதரகங்களுக்கு தாலிபான் போராளிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காபூல் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications