For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த உமா சித்ரா என்ற பி.காம் பட்டதாரி பெண்ணை 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹசாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் உதவியாளராக வேலை என்று அழைத்து சென்று வீட்டுவேலை செய்யச் சொல்லியுள்ளார்கள். அங்கு அவரை ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை பார்க்க வைத்து சரியான சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து இந்திய தூதரகம் வந்த அவர் மீது காவல் நிலையத்தில் திருட்டுப் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து செய்யாத தவறுக்காக கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கை வாபஸ் பெற 26 ஆயிரம் ரியால் கேட்ட வீட்டு உரிமையாளரிடம் ஒரு வழியாக பேசி 23 ஆயிரம் ரியால் கொடுத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் உமா சித்ராவை மீட்டுள்ளன.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் இன்று இரவு துபாயில் இருந்து புதுவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

English summary
Tamil organizations and tamils living in UAE helped Uma Chitra, a Puducherry based young woman to get out of Saudi prison. She was locked up in prison on no fault of hers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X