For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு பெண் கைதிக்கு மரண தண்டனை... 14வது பெண்!

Google Oneindia Tamil News

டெக்சாஸ்: அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ,விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் சுசேன் பாசோ. இவருக்கு 59 வயதாகிறது. இவர் அதே வயதான லூயிஸ் முசோ என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.லூயிஸ் முசோ பல காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்து இருந்தார்.அந்த பணத்தை அபகரித்துகொள்ள சுசேன் முடிவு செய்தார்.

இதனால் லூயிஸை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.அப்பணம் கிடைத்தவுடன் சுசேன்,லூயிஸை கொலை செய்து உடலை சாக்கடைக்குள் எறிந்து விட்டார். காவல் துறை சுசேனை கைது செய்தது. விசாரணைக்குப் பின்னர் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து சுசேன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.அவ்விசாரணையில் சுசேனின் வக்கீல் மனநிலை பாதிக்கப்பட்டதால்தான் அவர் அவ்வாறு செய்தார் என வாதாடினார்.ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே,சுசேனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க சட்டப்படி, அவருக்கு லெத்தால் விஷ ஊசி போடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 3100 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதில் 60 பெண்களும் அடக்கம். 1976-க்கு பின்பு இதுவரை 1400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 14-வது பெண் சுசேன் பாசோ ஆவார்.

English summary
Suzanne Basso became the fourteenth woman to be executed in the US in the modern era after a last-minute appeal to the Supreme Court failed on Wednesday.The 59-year-old former seamstress was put to death by lethal injection at the Texas state penitentiary in Huntsville, near Houston.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X