For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’காஸ்ட்ரேஷன்’ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்! அதுவும் இந்த மாதிரியா? ‘தாய்’ அதிரடி..!

Google Oneindia Tamil News

பேங்காக் : தங்கள் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

உலகளவில் 6 பெண்களில் ஒருவர் மற்றும், 33 ஆண்களில் ஒருவர் என வாழ்நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதில் அதிகமாக 16 வயதுக்குட்பட்ட பெண்களே பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 பாலியல் இச்சைக்கு திருநங்கையிடம் சென்றவர்.. டார்ச்சர் செய்ததால் அடித்தே கொலை! வெலவெலத்துப் போன கோவை பாலியல் இச்சைக்கு திருநங்கையிடம் சென்றவர்.. டார்ச்சர் செய்ததால் அடித்தே கொலை! வெலவெலத்துப் போன கோவை

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்கள்

அமெரிக்க மட்டுமல்லாது ஐரோப்பா ஆப்ரிக்க நாடுகளிலும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது இந்தியாவிலும் உத்தர பிரதேசம் ராஜஸ்தான் பீகார் உள்ளிட்ட மாநிலங்களை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் நான்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. சமீப காலமாக பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது.

மரண தண்டனை விதிப்பு

மரண தண்டனை விதிப்பு

ஒருபுறம் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடைமுறை இருந்து வந்தாலும் அது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. உலக அளவில் சுமார் 140 நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ள நிலையில் 50 நாடுகளில் மரண தண்டனை அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஈரான் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை இன்று வரை நடைமுறையில் உள்ளது.

கொடூர தண்டனைகள்

கொடூர தண்டனைகள்

வளைகுடா நாடுகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களது தலையை துண்டிக்கும் நடைமுறை உள்ளது. புரூனே நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கல்லால் அடித்துக் கொள்ளும் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனைக்கு பதில் ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற குரல்களும் எழுந்து வருகிறது. தற்போதைய சூழலில் புகழ்ந்து தென்கொரியா ரஷ்யா அமெரிக்காவின் சில மாநிலங்களில் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளது.

ஊசி மூலம் ஆண்மை நீக்கம்

ஊசி மூலம் ஆண்மை நீக்கம்

இந்த நிலையில் தாய்லாந்தில் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருந்தாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 16,000 பாலியல் குற்றவாளிகள் தாய்லாந்து நாட்டில் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள நிலையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறைந்த கால இடைவெளியில் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

English summary
A bill has been passed by the Thai Parliament and approved by the Senate as the country has decided to chemically remove the male factor from sex offenders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X