For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா.. இப்படித்தாங்க இருக்கப் போகுது வருங்கால விமானங்கள்!

Google Oneindia Tamil News

மாலிபு, கலிபோர்னியா: வருங்கால விமானங்கள் எதுமாதிரியாகவும் இல்லாத புதுமாதிரியாக இருக்கும் என்பதி்ல் சந்தேகம் இல்லைதான். இருப்பினும் மிக மிக வித்தியாசமான ஒரு தொழில்நுட்பத்தை போயிங் விமான நிறுவனத்தினர் உருவாக்கியுள்ளனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விமானமே இது பொய்டடா.. வெறும் காற்றடைத்த பையடா என்று சொல்லலாம். ஆம், காற்றையே அடிப்படையாக வைத்து விமானத்தைத் தயாரிக்கத் தேவையான மெட்டீரியலை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது.

மைக்ரோலேட்டிஸ் என்பதுதான் அந்த மெட்டீரியலின் பெயர். இதை மனித எலும்புகளின் அடிப்படையை முன்மாதிரியாக வைத்து உருவாக்கியுள்ளது போயிங் நிறுவனம்.

முடியை விட மெல்லியது...

முடியை விட மெல்லியது...

ஹாலோ டியூப்களை ஒருங்கிணைத்து இந்த மெட்டீரியலை உருவாக்கியுள்ளனர் போயிங் நிறுவனத்தார். இதுதான் இங்கு விசேஷமானது. இந்த டியூப் ஒவ்வொன்றும் மனித தலை முடியின் அடர்த்தியை விட 1000 மடங்கு மெல்லியதாகும்.

மெல்லிய மெட்டல்...

மெல்லிய மெட்டல்...

உலகிலேயே மிகவும் மெல்லிய மெட்டல் இதுதான் என்றும் போயிங் அறிவித்துள்ளது. இந்த மெட்டீரியலின் 99.99 சதவீதம் வெற்றிடம் (ஹாலோ) என்றும் அது கூறியுள்ளது.

ஸ்டைரோபோமை விட லேசானது...

ஸ்டைரோபோமை விட லேசானது...

ஸ்டைரோபோம் என்ற மெட்டீரியலை விட 100 மடங்கு லேசானதும் கூட இது. எதிர்காலத்தில் விமானங்களைக் கட்டமைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றும் போயிங் தெரிவித்துள்ளது.

எளிதாக தரையிறக்கலாம்...

எளிதாக தரையிறக்கலாம்...

எனவே விமானங்களை மிகப் பெரிய கட்டடத்தின் மீது எளிதாக தரையிறக்கலாம் என்பது தான் போயிங் கூறும் முக்கிய அம்சமாகும்.

ஆய்வு...

ஆய்வு...

போயிங் நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்பில் எச்ஆர்எல் ஆய்வகம் என்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. விமானத்தின் சீட்கள், கண்ணாடி பிரேம்கள், தரைப்பரப்பு ஆகியவற்றில் இதைப் பயன்படுத்த முடியும் என்றும் போயிங் கூறியுள்ளது.

நாசாவுடன் இணைந்து...

நாசாவுடன் இணைந்து...

வருங்கால விண்வெளி ஓடங்கள் தயாரிப்பு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் இணைந்தும் எச்ஆர்எல் பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Boeing has revealed the world's lightest metal structure, which it claims is 99.99% hollow. The revolutionary breakthrough claims to be 100 times lighter than Styrofoam and could be the future for aeronautical design, and is so light that is can sit atop a dandelion Called a microlattice, it is so strong the firm says an egg wrapped in the material would survive a 25 story drop .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X