இம்ரான்கானுக்கு பலத்த அடி.. கடைசி நேரத்தில் காலை வாரிய கூட்டணி கட்சியினர்.. எதிர் முகாமுக்கு பல்டி.!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக 3 முக்கிய கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்துள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் செய்யாத இம்ரான்கான் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதிபர் இம்ரான் கான்
இதற்கு சம்மந்தப்பட்ட நோட்டீசை கடந்த 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாடளுமன்ற சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதாக எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியை சேர்ந்த பிஎம்எல்க்யூ கட்சியும், இம்ரானின் தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த 25 எம்பிக்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் இம்ரான் ஈடுபட்டுள்ளார். இவர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால், இம்ரான் கான் ஆட்சியை இழக்க நேரிடும்.

பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த இம்ரான் கான் நேற்று இந்தியாவின் வெளியுறவு கொள்கையை குறித்து பாராட்டினார். இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு இந்தியாவில் ஆதரவு இருந்தாலும் பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சியினர் மட்டுமல்லாது ஆளும் கட்சியினரே இம்ரான்கானை விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக 3 முக்கிய கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்துள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. இவ்விவகாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெரும் அதிர்ச்சியை சந்தித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலைவாரிய கூட்டணி கட்சிகள்
பகிஸ்தானின் ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-குவைட் (PML-Q) மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சி (BAP) ஆகியவை இம்ரான் கானுக்கான எதிராக எதிர்க்கட்சிகளுடன் இணைவது குறித்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இம்ரான்கானின் சொந்த கட்சி எம்என்ஏக்களே பலர் கட்சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்துள்ளனர். முன்னதாக, சுமார் 24 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் நம்பிக்கை
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கடந்த மார்ச் 8ஆம் தேதி தேசிய சட்டமன்ற செயலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்தன. நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை தோற்கடிப்போம் என இம்ரான் கான் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இம்ரான்கானை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு தான் மிகவும் ஆபத்தானவராக இருப்பேன் என்று இம்ரான்கான் எச்சரித்துள்ளார். 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் இம்ரான் கான் அரசுக்கு குறைந்தபட்சம் 172 உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications