இந்தியாவை பற்றி எந்த கவலையும் இல்லை.. மனசாட்சியே இல்லாமல் பேசும் மல்லையா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியாவை பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

இந்தியாவே, "கடன்காரா" என கரித்துக் கொட்டினாலும்கூட, கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பது விம்பிள்டன் டென்னிஸை நேரில் பார்ப்பது, குதிரை ரேஸ், கார் ரேஸ் என முழுக்க உல்லாசமாக பொழுதை கழித்து வருகிறார் மல்லையா.

மிதப்புதான்

மிதப்புதான்

இந்தியாவில், சிறையிலே அடைத்தால் கூட, ஜெயிலுக்கு பணம் கொடுத்து கிச்சன் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற மிதப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உணர்வே இல்லை

உணர்வே இல்லை

அதை உறுதி செய்வதை போலத்தான் பேட்டியளித்துள்ளார் மல்லையா. இந்தியாவை விட்டு பிரிந்திருப்பதை போன்ற ஃபீலிங்க் ஏற்படவே இல்லை என விஜய் மல்லையா கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

சொந்தக்காரர்களோடு செட்டில்

சொந்தக்காரர்களோடு செட்டில்

லண்டனில் நடைபெற்ற பார்முலா- 1 கார் பந்தயத்துக்கு சென்ற விஜய் மல்லையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது கஸின் சகோதர, சகோதரிகள் கூட பிரிட்டனில்தான் வசிக்கின்றனர் என்பதால், நான் இந்தியா பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார் மல்லையா.

மோடிக்கு பதிலடி

மோடிக்கு பதிலடி

எனது உறவுகளை நான் மிஸ் செய்யவில்லை. பிரிட்டன் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். மல்லையாவை ஒப்படைக்கும்படி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் மல்லையா இவ்வாறு கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Embattled liquor baron and businessman Vijay Mallya, who is currently fighting a high-profile Indian extradition request, said he is 'not missing India'.
Please Wait while comments are loading...