For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கதையாகும் மெக்கா, மினா விபத்துகள்.. ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் உயிரிழக்கும் சோகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

துபாய்: உலகின் பல பகுதிகளில் இருந்து சவுதி அரேபியா வரும் முஸ்லிம்கள், மெக்கா புனித தலத்தையும், மினாவுக்கும் சென்று தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்கிறார்கள். இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக அவ்வப்போது ஹஜ் யாத்திரை சமயங்களில் பெரும் விபத்துகள் நடக்கின்றன.

Timeline of some of the worst Hajj related tragedies

கடந்த காலங்களில் நடைபெற்ற பெரிய விபத்துகள் பற்றிய ஒரு தொகுப்பு:

2015: மெக்கா அருகேயுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் சாவு.

2015: மெக்கா மசூதி அருகே, கிரேன் சரிந்து விழுந்ததில் 107 யாத்ரீகர்கள் மரணம்.

2006: மினா நகரில் சாத்தான் மீது கல் எறிதல் சடங்கில் ஈடுபட்ட யாத்ரீகர்கள் நடுவே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் சாவு.

2006: ஹஜ் யாத்திரை துவங்கும் ஒரு நாள் முன்பாக, மெக்கா மசூதி அருகேயுள்ள 7 மாடி யாத்ரீகர் தங்கும் விடுதி இடிந்து விழுந்து 73 பேர் உயிரிழப்பு.

2004: மினாவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 244 பேர் பரிதாபமாக உயிரிழநத்னர்.

2001: மினாவில் ஹஜ் யாத்திரையின் கடைசி நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

1998: வதந்தி காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 180 பேர் உயிரிழந்தனர்.

1997: மினாவில் நடைபெற்ற தீ விபத்தில் சிக்கி 340 யாத்ரீகர்கள் உடல் கருகி உயிரிழநத்னர். 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1994: மினாவில் சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 270 பேர் உயிரிழநத்னர்.

1990: ஹஜ் தொடர்பாக ஏற்பட்ட விபத்துகளிலேயே மிக மோசமான விபத்து அந்த ஆண்டு நடைபெற்றது. மெக்கா செல்லும் வழியில் உள்ள சுரங்க பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 1426 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

English summary
Mecca is no stranger to tragic accidents in modern times, particularly as hundreds of thousands descend on the city prior to the annual hajj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X