ஜப்பானை மூர்க்கமாக தாக்கிய தாலிம் புயல்- விமானம், ரயில் சேவைகள் அடியோடு ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டோக்கியா: ஜப்பானை தாக்கிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல். இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது இர்மா புயல். தற்போது ஜப்பானை மிரட்டிக் கொண்டிருக்கிறது தாலிம் புயல்.

Typhoon Talim slams Japan, hundreds of flights grounded

பசுபிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தாலிம் புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை மிக மோசமாக தாக்கி வருகிறது. மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பயங்கர காற்று வீசுகிறது.

இதனால் ஜப்பானில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் பெருமழையை எதிர்கொண்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A powerful typhoon ripped into southern Japan on Sunday, dumping torrential rain, grounding hundreds of domestic flights and halting train services.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற