For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’நேட்டோ’ ! துண்டை போட்டு வைத்த ஜெலன்ஸ்கி! எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் உக்ரைன்! கடுப்பான ரஷ்யா!

Google Oneindia Tamil News

கீவ் : உக்ரைன் நாட்டின் பகுதிகளை ரஷ்யாவில் இணைப்பதாக விளாடிமிர் புதின் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே நேட்டோ அமைப்பில் சேர்வதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலஸ்கி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்களை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருவதாக உலக நாடுகளிடம் அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தும் பயனில்லாமல் போனது.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் கோரிக்கைக்கும்ன், மிரட்டல்களுக்கும் ஏன் பொருளாதாரத் தடைகளுக்குக் கூட கொஞ்சமும் செவி சாய்க்காமல் உக்ரைனை துவம்சம் செய்தே ஆக வேண்டுமென உறுதியாய் இருக்கிறது.

உடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்கஉடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்க

 உக்ரைன் - நேட்டோ

உக்ரைன் - நேட்டோ

இதற்கெல்லாம் மூலமுதற் காரணம் என்னவென்றால் நேட்டோ தான். உக்ரைன் நேட்டோவில் சேர ஆர்வம் காட்டிய நிலையில் அதற்கு ரஷ்யா துளியும் எண்ணமில்லாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் மீது திடீரென போர் தொடுத்தது. போர் தொடங்கி கிட்டத்தட்டட 7 மாதத்திற்கும், 200 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

 அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில் தான் உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் அந்நாட்டிடம் இருந்து ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரஷ்யா. இது தொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள லூஹன்ஸ்க், டெனட்ஸ்க், கர்சன், ஜெப்ரோஸியா உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்திருப்பதாக கூறினார். வழக்கம் போல் இதற்கும் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வோலோடிமிர் ஜெலன்கி

வோலோடிமிர் ஜெலன்கி

இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் வகையில் புதிய ஆயுதம் ஒன்றை கையிலெடுத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்கி. உக்ரைன் நாட்டின் பகுதிகளை ரஷ்யாவில் இணைப்பதாக விளாடிமிர் புதின் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே நேட்டோ அமைப்பில் சேர்வதற்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலஸ்கி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள ஜெலன்ஸ்கி," நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விரைவான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை நாம் தற்போது எடுத்திருக்கிறோம்.

சட்டப்பூர்வம்

சட்டப்பூர்வம்

ரஷ்யா அதிபராக விளாடிமிர் புதின் இருக்கும் வரை உக்ரைன் - ரஷ்யா இடையே எந்த வித பேச்சுவார்த்தையும் நடக்கப் போவதில்லை. விரைவில் புதிய அதிபருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் ஏற்கனவே நேட்டோவில் சேர்ந்து விட்டோம். கடந்த காலங்களில் இது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது போர்க்களத்தில் எங்கள் தொடர்புகள் உண்மையாக இருந்தது நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். ஒருவருக்கு ஒருவர் உதவுகிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறோம். இதுதான் கூட்டணி. அதே நேரத்தில் அது சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உக்ரைன் தற்போது நேட்டோவில் சேர வேண்டும் என விண்ணப்பித்துள்ளது" என பேசினார்.

English summary
Ukrainian President Volodymyr Zelensky has announced that he has submitted an application to join NATO, while Vladimir Putin is announcing the annexation of parts of Ukraine to Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X