உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் ரஷ்யாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கல்லூரி மாணவி போர் நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு கணுக்காலில் புதினுக்கு எதிராக டாட்டூ போட்ட நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவும், உக்ரைனும் அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் இருநாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சனை நீடித்து வந்தது.
ரஷ்யாவை ஒப்பிடும்போது உக்ரைன் மிகவும் சிறிய நாடாகும். இதனால் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைன் அமெரிக்காவின் ‛நாட்டோ' அமைப்பில் சேர முடிவு செய்தது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை.

உக்ரைன் மீது போர் தொடக்கம்
இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த ஆண்டு தொடக்கத்தில் போர் பதற்றம் அதிகரித்தது. 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் அந்தநாட்டின் படைகள் போரை தொடங்கின. வான்வெளி, தரைவழி தாக்குதலை தீவிரமாக ரஷ்ய படைகள் மேற்கொண்டன. இதனால் உக்ரைன் உருக்குலைந்து போனது. இருப்பினும் கூட உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வீரமாக ரஷ்யாவின் படைகளை எதிர்த்தனர்.

பல ஆயிரம் பேர் பலி
தற்போது 11வது மாதமாக போர் தொடர்ந்து வருகிறது. எளிதில் போரில் வென்று உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்ற ரஷ்யாவின் கனவு இன்னும் மெய்ப்படவில்லை. இந்த போரில் தற்போது வரை உக்ரைனில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் இறந்த நிலையில் ரஷ்யா படைகளிலும் பல ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் உக்ரைனை விட்டு பல லட்சம் பேர் பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்னளர். உக்ரைனை சூழ்ந்த போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 24 வந்தால் வந்த போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ளது.

உலக நாடுகள் கண்டிப்பு
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்த வருகிறது. அதாவது போர் முடிவை ரஷ்யா கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும் கூட இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

கல்லூரி மாணவி எதிர்ப்பு
இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவிலும் சிலர் போர் நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியை 19 வயது ஒலேஸ்யா கிரிவ்ட்சோவா உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆர்க்காங்கெல்ஸ்கில் உள்ள வடக்கு பெடரல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவர் தனது சமூக வலைதள பதிவில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

காலில் டாட்டூ
மேலும் அவர் தனது கணுக்காலில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய ராணுவத்தை இழிவுப்படுத்தியதாகவும், பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத பட்டியலில்..
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஒலேஸ்யா கிரிவ்ட்சோவா, நாட்டுக்கான அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதாவது அந்த நாட்டின் சட்டப்பபடி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், தாலிபான்கள், அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக இணைக்கும் பட்டியலில் ஒலேஸ்யா கிரிவ்ட்சோவாவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சிறையில் நீண்டகாலம் இருக்கும் நிலை ஏற்படும். இதுபற்றி அவரது தாயார் நடால்யா கிரிவ்ட்சோவா கூறுகையில், ‛‛ரஷ்யா அரசு போர் எதிர்ப்பு குரலை மவுனமாக்கும் முயற்சியில் செயல்படடு வருகிறது. எனது மகளின் கைது என்பது ஒரு பெரிய மிரட்டல்'' என சாடியுள்ளார். இந்த சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications