For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 9 வருடங்களில் உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்- ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு

Google Oneindia Tamil News

ஜெனீவா: பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான குழு, சமர்ப்பித்த அறிக்கை மனித குலத்திற்கு பல எச்சரிக்கைகளை பிறப்பிப்பது போல அமைந்துள்ளது.

Recommended Video

    Climate Change காரணமாக ஏற்படும் பாதிப்புகள்.. பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்| Explained

    இந்த குழுவில் 195 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இந்தியாவும் ஒன்று. இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

    பருவநிலை மாற்றம் ஏற்கனவே பூமியின் ஒவ்வொரு மூலையையும் தொட்டுவிட்டது. இது பல நூற்றாண்டு மனித அனுபவத்தை தொடர்ந்து மாற்றியமைக்க உள்ளது.

    UN Climate Change Panels Report Says 1.5 Earth Is On Track To Hit 1.5 degrees Celsius around 2030

    வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது அதன் தாக்கங்கள் தீவிரமடையும், 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நினைத்ததை விட முன்பாகவே உயரும் வாய்ப்பு உள்ளது என்று பருவநிலை மாற்றம் குறித்த விஞ்ஞானிகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2030களின் முற்பகுதியில் பூமி வெப்ப நிலை கூடி, 1.5 ℃ வெப்பமயமாதல் வரம்பை எட்டும் என்கிறது இந்த அறிக்கை. அதாவது நினைத்ததைவிட 10 வருடங்கள் முன்பாகவே இந்த நிலையை எட்ட உள்ளதாம்.

    தொடர்ச்சியான கடல் மட்ட உயர்வு போன்றவை இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஐபிசிசியின் இந்த அறிக்கையை, "மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு" என்று வர்ணித்துள்ளார்.

    இந்த அறிக்கையிலுள்ள சில முக்கியம்சங்கள்:

    உலகம் வேகமாக வெப்பமடைகிறது. உலகளாவிய வெப்பம் 2030 ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018 இல் திட்டமிடப்பட்டதை விட 10 ஆண்டுகள் முன்பாகவே நடைபெற உள்ளது.

    கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 1901-1971 க்கு இடையில் சராசரியாக ஆண்டுக்கு 1.3 மிமீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்தது இருந்தது. இது 2006-2018 க்கு இடையில் 3.7 மிமீ/வருடம் என்ற அளவுக்கு கூடியுள்ளது. அதாவது இரண்டு மடங்கை விட வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. உலக சராசரி கடல் மட்டம் 1901 மற்றும் 2018 க்கு இடையில் 0.20 (0.15 முதல் 0.25) மீ அதிகரித்துள்ளது.

    1950களில் இருந்து பெரும்பாலான நிலப்பகுதிகளில் வெப்ப உச்சநிலைகள் (வெப்ப அலைகள் உட்பட) அடிக்கடி நடக்கின்றன. அதே நேரத்தில் குளிர் தீவிரங்கள் (குளிர் அலைகள் உட்பட) குறைவாக நடக்கின்றன.

    மனிதனால்தான் வெப்பநிலை இந்த அளவுக்கு மாறியுள்ளது.

    நகரங்கள் புவி வெப்பமடைதலின் ஹாட்ஸ்பாட்களாக இருக்கின்றன, ஏனெனில் வெப்பத்தை உறிஞ்சி வைக்கும் நீர் நிலைகள், தாவரங்கள் போன்றவை நகரங்களில் குறைவாக உள்ளன.

    10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றும் 50 வருடங்களுக்கு ஒரு முறை கடுமையான வெப்பம், கனமழை மற்றும் வறட்சி நிகழ்வுகள் இனி, தீவிரமாக மாறும்.

    பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது

    தீவிர வானிலை நிகழ்வுகள் அதிக அளவு நடைபெறும். தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சி போன்றவை இருக்கலாம்.

    ஒரு குறிப்பிட்ட தீவிர நிகழ்வின் சரியான காரணங்களை அடையாளம் காண்பது கடினம் என்றாலும், ஒவ்வொரு தீவிர நிகழ்வுகளின் அளவு மற்றும் நிகழ்தகவுக்கு மனித பங்களிப்பை விஞ்ஞானிகள் இப்போது அளவிட முடியும்.

    கடந்த 2000 வருடங்களில் இல்லாத அளவுக்கு மனித செயல்கள் காலநிலையை மோசமாக வெப்பப்படுத்தியுள்ளது.

    நாம் முயற்சி செய்தால், புவி வெப்பமடைதல் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மட்டுப்படுத்தப்படலாம், ஆனால் அதற்கு அனைத்து நாடுகளும் கடுமையான முயற்சிகளை இப்போது இருந்தே எடுக்க வேண்டும். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    English summary
    The world is warming faster and Global heating is on track to hit 1.5 degrees Celsius around 2030, a decade earlier than projected in 2018, according to the IPCC report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X