கொரோனா மட்டுமில்லங்க.. மனித குலத்திற்கு பல சிக்கல் இருக்கு.. ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை
ஜெனீவா: கொரோனா, ஒமிக்ரான்,காலநிலை மாற்றம், மோதல் ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளதாக என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகமெங்கும் பரவத் தொடங்கி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையிலும், கடந்த ஆண்டுகளில் சண்டைகள் பெரிய அளவில் நடந்து பெரிய மோதல்களாக நடந்திருக்கிறது. இந்த மோதல்களால் நிறைய அசம்பாவிதங்கள் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான், வடகொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.நா தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. உலகில் தொடர்ந்து மோதல்களும் வன்முறையும் அதிகரித்துவருவதற்கு ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா, தடுப்பூசி குறித்தும் தொடர்ந்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கொரோனாதொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் உலகம் முழுவதும் பல இடங்களில் மோதல்கள் அதிகரித்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முன்பைவிட மோசமாகிவிட்டது.
இந்த மோதல்களை குறைக்க என்னால் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும். ஆனால் அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. மோதல்களை விரைவில் நிறுத்த வேண்டும். அந்த சூழ்நிலையில் தான் தற்போது நாம் இருக்கிறோம். இதை நான் ஆழமாக நம்புகிறேன். சமாதான முயற்சிகளில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு முடிவு கட்டுவதும் அவசியம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், பெண்களின் வேலை மற்றும் கல்விக்கான உரிமைகளில் கவனம் செலுத்த தாலிபான்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானின் பல்வேறு மக்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும்.கோவிட் தொற்று உள்ளிட்டவை விரைவில் சரியாகும் என்று நினைக்கிறேன்'' என்று ஐ.நா செயலாளர் கவலை தெரிவித்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications