இந்தியர்களை மீட்க.. காபூல் விமான நிலையத்தில் உதவி புரிந்து வரும் அமெரிக்க படைகள்!
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள்., பிற நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அமெரிக்க படைகள், நோட்டோ படைகள் மக்களை அங்கு இருந்து வெளியேற்றி வருகின்றன. பலர் திரண்டு விடுவதால் காபூல் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. அமெரிக்கா எதிர்கொண்ட மிக சவாலான பணி இப்போது ஆப்கானில் இருந்து மக்களை வெளியீட்டுவதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனே கூறினார்.

இந்தியர்கள் மீட்பு
இதுவரை சுமார் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்தியாவும் ஆப்கானில் உள்ள இந்திய மக்களை மீட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில் இந்திய விமானப்படை (IAF) ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 120 இந்திய குடிமக்களை வெளியேற்ற ஒரு சிறப்பு விமானத்தை இயக்கியது. துஷன்பே, தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் வழித்தடங்கள் வழியாக இந்திய மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அமெரிக்கா அனுமதி
தற்போது காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய மக்களை அழைத்து வர இந்தியாவிற்கு தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானம் ஒன்று 90 பயணிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது.

ஜோ பைடன் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இன்னும் 300-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் பத்திரமாக இந்திய விமானப் படை விமானம் மீட்டு வரும் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆப்கானில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாலிபான்களை எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் காபூலில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்று கூறப்படுகிறது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications