எல்லை பிரச்சனை தீர இந்தியாவும் சீனாவும் பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான எல்லை பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் வலியுறுத்தியுள்ளார்.

சிக்கிம் மாநில எல்லையில், பூடானின் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சாலைகள் அமைக்க முயன்றது. அதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சீனா ராணுவ வீரர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து டோக்லாம் எல்லை பகுதியில் போர்ப் பதற்றம் சூழ்ந்தது.

 US Keeping 'Close and Careful' Watch on China India in Doklam Standoff

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இந்திய படைகளை வாபஸ் பெற்றால் தான் பேச்சுவார்த்தையே நடைபெறும் என சீனா உறுதியாக இருக்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கூறும் போது, ' தற்போது நிலவும் இந்த சூழலை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இருநாடுகளும் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்' என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US Keeping 'Close and Careful' Watch on China India in Doklam Standoff isssue.
Please Wait while comments are loading...