வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் சிறுவன் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரகஸ்: வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் 17 வயது சிறுவன் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மடுரோ பதவி விலக வலியுறுத்தி தலைநகர் காரகஸின் முக்கிய பகுதிகளில் தினம் தோறும் எதிர்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Violent clashes in Venezuela

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை நடந்த பேரணியில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 17 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
one person died after Violent clashes in Venezuela
Please Wait while comments are loading...