பயங்கரவாதத்தின் பெயர் மாறுபட்டாலும் அதன் சித்தாந்தங்கள் ஒன்று தான்: பிரதமர் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹம்பர்க்: பயங்கரவாதத்தின் பெயர்கள் மாறுபட்டாலும் அவற்றின் சித்தாந்தங்கள் ஒன்றாகத் தான் இருக்கின்றன என ஜெர்மனியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

violent protests continued by various rights groups, says modi

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒரு மித்த கருத்து தேவை. பயங்கரவாதத்தின் பெயர்கள் மாறுபட்டாலும் அவற்றின் சித்தாந்தங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு புகழிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும். நிதியுதவி கிடைப்பது தடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
violent protests continued by various rights groups, says pm modi in BRICS summit.
Please Wait while comments are loading...