"சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா!" உக்ரைன் போரில் கொல்லப்பட்ட தாய்.. 9 வயது சிறுமி உருக்கமான கடிதம்
கீவ்: உக்ரைன் போரின் கொடூரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 9 வயது சிறுமி தனது தாய்க்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது.
இதனால் உக்ரைன் நாட்டில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டில் இருந்து பல லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் போர்
கீவ் நகரில் இருந்து ரஷ்ய ராணுவம் மெல்ல வெளியேறி வருகிறது. அதேநேரம் வடக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து தாக்கி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்கி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை ரஷ்யா மறுத்துள்ள போதிலும், ஆயுதமில்லாமல் சாதாரண உடையில் இருந்த அப்பாவி மக்கள் கொல்லப்படும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

9 வயது சிறுமி
இந்நிலையில், உக்ரைன் போரில் கொல்லப்பட்ட தனது தாய்க்கு 9 வயது சிறுமி எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. இனிமேல் நல்ல பெண்ணாக இருப்பேன் என்றும் மீண்டும் சொர்க்கத்தில் சந்திக்கலாம் என்றும் அச்சிறுமி நெகிழ்ச்சியான தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 9 வயது சிறுமி தனது கைப்பட எழுதிய இந்தக் கடிதத்தை உக்ரைன் உள் துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உருக்கமான கடிதம்
போரோடியங்கா பகுதியில் கொல்லப்பட்ட இச்சிறுமியின் தாயார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காரில் சென்று கொண்டிருந்த போது ரஷ்ய ராணுவத்தினர் அந்த காரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்ட தனது தாய்க்கு இச்சிறுமி எழுதியுள்ள கடிதம் படிப்போர் இதயத்தைக் கரையச் செய்யும் வகையில் உள்ளது. பலரும் இந்தக் கடித்ததை இணையத்தில் பகிர்ந்து ரஷ்யாவின் அட்டூழியங்களுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நீங்க தான் பெஸ்ட்
அந்த சிறுமி தனது கடிதத்தில், "அம்மா. இந்தக் கடிதம் மார்ச் 8 உங்களுக்கான பரிசு. என் வாழ்வின் சிறந்த ஒன்பது வருடங்களைத் தந்ததற்கு நன்றி. எனது குழந்தைப் பருவத்தில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் தான் உலகிலேயே மிகச் சிறந்த அம்மா. நான் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் சொர்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சொர்க்கத்தில் சந்திப்போம்
நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா. உங்களைக் காணச் சொர்க்கத்திற்கு வர என்னால் முடிந்த வரை நல்ல பெண்ணாக இருக்க முயல்வேன்" என்று அச்சிறுமி உருக்கமான கடித்ததை எழுதியுள்ளார். இந்தக் கடிதம் ஒன்றே போர் எவ்வளவு கொடியது என்பதையும் புதின் என்ற நபரின் ஒற்றை சுயநலனிற்காக நடக்கும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இருப்பினும், கடந்த சில மாதம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தனது ராணுவத்தைக் குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டது. இருந்த போதிலும், இந்தப் போர் இன்னும் கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications