மர்ம கிரகங்கள்.. பீதி கிளப்பும் வேற்றுகிரகவாசிகள்.. ஹாக்கிங் அச்சம் நியாயமானதே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: "கிளீஸ் 832 சி" கிரகம் குறித்த ஆய்வுகள் இன்றளவும் படு சூடாக இருக்கின்றன. பூமியை பல விஷயங்களில் இது ஒத்துப் போனாலும் கூட அதையும் தாண்டி அங்கு மறைந்துள்ள மர்மங்கள், ஹாக்கிங் போன்ற பெரிய விஞ்ஞானிக்கே அச்சம் கொடுக்கிறது என்றால் அந்த கிரகம் குறித்த மர்மங்களை நம்மால் ஊகிக்க முடியும்.

நமக்கு பக்கத்து வீடுதான் இந்த கிளீஸ் கிரகம். அதாவது 16 ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் உள்ளது. நம்பர் கணக்கைப் போட்டுப் பார்த்தால் அடேங்கப்பா இத்தனை கோடி கிலோமீட்டரா என்று மலைக்க வைக்கும். ஆனால் பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் 16 ஒளி ஆண்டு என்பதெல்லாம் ச்சும்மா குட்டி தூரம்தான்.

பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகமானது பூமியை விட மிகப் பெரியது. அதாவது 5 மடங்கு நிறை கொண்டது. மிகப் பெரிதானது.

தட்பவெப்பம் ஒன்று

தட்பவெப்பம் ஒன்று

அதேசமயம், பூமியைப் போலவே இதன் தட்பவெப்பமும் உள்ளதுதான் விஞ்ஞானிகளை அதிகம் கவர்ந்துள்ளது. அதேசமயம், இங்கு உயிர்கள் இருக்கும் என்பதை ஊகிக்கும் விஞ்ஞானிகள் கூடவே, இங்கு வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

பயங்கர அறிவாளிகளாம்

பயங்கர அறிவாளிகளாம்

இந்த கிரகத்தில் உள்ள உயிரினங்கள் குறித்த கற்பனைகள் அதன் பின் தாறுமாறாக கிளம்பி விட்டன. இங்கு வசிக்கும் வேற்றுகிரகவாசிகள் நம்மை விட மிக மிக பயங்கர புத்திசாலிகள், நம்மை விட சக்தி வாய்ந்தவர்கள் என்றெல்லாம் செய்திகள் குவிந்து விட்டன. கிட்டத்தட்ட ஹாக்கிங்கின் பேச்சும் இதை உண்மை என்றே நம்ப வைக்கிறது.

அழித்து விடுவார்கள்

அழித்து விடுவார்கள்

ஹாக்கிங் இந்த கிரக உயிரினங்கள் குறித்துக் கூறுகையில், வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வு நல்ல விஷயம்தான். அவர்களிடமிருந்து ஒரு நாள் நிச்சயம் சிக்னல் வரும். ஆனால் அதை ஏற்காமல் இருப்பதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Stephen Hawking launched space program to find E.T.
2014ல் கண்டுபிடிப்பு

2014ல் கண்டுபிடிப்பு

இந்த கிரகமானது 2014ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சைஸ்தான் விஞ்ஞானிகளை அயர வைத்துள்ளது. இது ஒரு குட்டிச் சூரியனை சுற்றி வருகிறது. அந்த சூரியனும் அழிந்து கொண்டுள்ளது. நமது சூரியனை விட சிறியது இது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Plante named Gliese 832 C is just 16 light years from the Earth and it has created lot of debates after Stephen Hawking's warning on the Aliens.
Please Wait while comments are loading...