கொரோனாவுக்கு பயந்து கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாரா ராக்கெட் மேன் கிம் ஜாங் உன்?
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸ் பரவலால் அச்சமடைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளது அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம்மிற்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து டெய்லி என்கே என் கிம் ஜான் உன்னிற்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. தனது தந்தை இறப்பிற்கு பிறகு அதிபர் பதவிக்கு வந்த கிம்மிற்கு பிறகு அப்பதவிக்கு யார் வருவார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

கொரோனா வைரஸ்
இந்த நிலையில் 36 வயதாகும் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸ் அச்சத்தால் வெளியே வராமல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் தளம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் உள்ளதால் கொரோனா வர அதிகம் வாய்ப்பிருப்பதால் அவர் யாரையும் சந்திக்காமல் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பொது வெளியில்
கடந்த 2014-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் ஒரு மாதத்திற்கு மேல் பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். பின்னர் அவர் தாங்கி தாங்கி நடப்பது போன்ற காட்சிகள் தென் கொரிய அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அது போல் தற்போதும் அவர் 13 நாட்களுக்கு மேல் பொது வெளியில் தோன்றாமல் உள்ளார்.

யூகங்கள்
இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அவர் இறந்திருக்கலாம் என்கிறார்கள், அவர் மூளைச்சாவு அடைந்திருக்கலாம் என்கிறார்கள், அவர் நன்றாக இருக்கலாம் என்கிறார்கள். வடகொரிய நாட்டு அரசு ஊடகங்களோ அவர் ஏப்ரல் 14-ஆம் தேதி ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வீடியோவை இன்னும் வெளியிடாதது யூகங்களுக்கு கை, கால் , கண், மூக்கு வைத்து பார்க்கப்படுகிறது.

மருத்துக் குழுவினர்
இந்த நிலையில் அவர் உயிரோடு இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தென்கொரியா உறுதியாக தெரிவித்துள்ளது. பியாங்யாங்கில் கிம்மின் விமானம் இருப்பது போன்றும் வான்சானில் அவரது ரயில் நிற்பது போன்றும் செயற்கைக் கோள் புகைப்படங்களை தென் கொரிய உளவுத் துறை வெளியிட்டுள்ளது. இதனிடையே கிம்மிற்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க அந்நாட்டுக்கு மருத்துவக் குழுவினரை சீனா அனுப்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications