புதிதாக பரவும் 'Mu' உருமாறிய கொரோனா.. வேக்சினுக்கு கட்டுப்படுவதில்லை.. தீவிரமாக கண்காணிக்கும் WHO

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: கொலம்பியா நாட்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு 'மூ' என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த மூ கொரோனாவை 'கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக' பட்டியலிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது வேக்சினில் இருந்து தப்புமா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறது.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் தான் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த உருமாறி கொரோனா கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் மோசமான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

சில நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தியதைப் போலத் தோன்றினாலும், சில மாதங்களில் அவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவதால், கொரோனாவை ஒழிக்க முடியுமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

அதிலும் இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. எனவே, இதைச் சமாளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அடுத்து பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மூ கொரோனா

மூ கொரோனா

இந்நிலையில் தற்போது ஆய்வாளர்கள் கொலம்பியா நாட்டில் புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிந்துள்ளனர். ஜனவரி மாதம் முதலில் கண்டறியப்பட்ட இந்த B.1.621 என்ற உருமாறிய கொரோனாவுக்கு மூ என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். மேலும், உலக சுகாதார அமைப்பு இதைக் கவனிக்க வேண்டிய கொரோனா வகையாகவும் பட்டியலிட்டுள்ளது. இந்த மூ கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், இது குறித்து உடனடியாக கூடுதல் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

39% பேருக்கு மூ கொரோனா

39% பேருக்கு மூ கொரோனா

இந்த புதிய மூ உருமாறிய கொரோனா உட்பட மொத்தம் 5 வகைகளைக் கண்காணிக்க வேண்டிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. கொலம்பியா நாட்டில் மூ கொரோனா முதலில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பிறகு சில தென் அமெரிக்க நாடுகளிலும், சி ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மூ கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் genome sequence மேற்கொள்ளப்படும்போது 0.1% பேருக்கு இந்த மூ கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் கொலம்பியா நாட்டில் 39% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேக்சின் வேலை செய்யாமல் போகலாம்

வேக்சின் வேலை செய்யாமல் போகலாம்

உலகெங்கும் டெல்டா கொரோனவால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் உருமாறிய கொரோனா வகைகள் தோன்றுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பா, வேக்சின் போடாதவர்கள் மத்தியில் கொரோனா பரவல் ஏற்படும் போது, அவை எளிதாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் வேக்சின்கள் வேலை செய்கின்றன. டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைந்தாலும்கூட, இது உயிரிழப்புகளையும் தீவிர கொரோனாவையும் தடுக்கிறது.

3ஆவது பூஸ்டர் டோஸ்

3ஆவது பூஸ்டர் டோஸ்

ஆனால் கொரோனா வைரஸ் இப்படித் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வந்தால், ஒரு கட்டத்தில் அது தடுப்பூசிக்குக் கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலை வருவதற்குள் அனைவருக்கும் வேக்சின் போட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் தான் 3ஆவது பூஸ்டர் டோஸ் குறித்தும் உலக நாடுகள் இப்போது அவசரம் காட்டக் கூடாது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+