வேலையை காட்டும் சீனா.. சுனாமி தாக்கிய டோங்காவிலும் கையை வைக்கும் ஜின்பிங்.. டிராகன் விரிக்கும் சதி
பெய்ஜிங்: சமீபத்தில் சுனாமி தாக்கிய டோங்கா நாட்டிற்கு உதவி செய்ய போவதாக சீனா அறிவித்துள்ளது. வெளியில் இருந்து பார்க்க இது என்னவோ நல்ல செய்தி போல தெரிந்தாலும்.. அந்த நாட்டிற்கு இனிதான் கெட்ட நேரமே ஆரம்பிக்க போகிறது என்று உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
அது என்ன எச்சரிக்கை என்று பார்க்கும் முன்.. டோங்காவின் சுனாமி குறித்து ஒரு குட்டி ரீ கேப். கடந்த 15ம் தேதி காலை கடலுக்குள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கா நாட்டில் சுனாமி ஏற்பட்டுள்ளது. டோங்கா என்பது நியூசிலாந்துக்கு மேலே இருக்கும் தீவு நாடு.
மொத்தம் 169 தீவுகள் கொண்ட நாடு ஆகும். இங்கு 36 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. மற்ற தீவுகளில் 1,00, 200, 1000 என்ற எண்ணிக்கையில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு மொத்தமாக இருப்பதே 1,05,000 பேர்தான்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் நட்பான நாடு, ஆஸ்திரேலியாவுக்கு நட்பு என்றால் தானாக அமெரிக்காவிற்கும் நட்பான நாடு. ஆஸ்திரேலியாவிற்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்து இருக்கும் தீவு தேசம்தான் டோங்கா. பழங்குடி இன மக்கள் அதிகம் கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசம் இது. இங்குதான் எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளது. ஹுங்கா டோங்கா என்ற எரிமலை அங்கு வெடித்தது. எரிமலை வெடிப்பு கடலுக்கு உள்ளே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுனாமி
இதனால் திடீரென கடல் அலைகள் மேலே எழுந்து சுனாமி ஏற்பட்டது. எரிமலை வெடிப்பு காரணமாக உருவான ஷாக் அலைகள் காரணமாக கடல் கொந்தளித்து சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் அங்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மக்கள் பலியானதாக செய்திகள் வெளியாகவில்லை. கடல் அலையால் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அங்கு ஏற்பட்ட உண்மையான சேத நிலவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.டோங்கா நாட்டிற்கு உதவ உலக நாடுகள் முன் வந்துள்ள நிலையில்தான் சீனாவும் நாங்களும் உதவுகிறோம் என்று மூக்கை நீட்டி உள்ளது.

சீனா உதவி
அதன்படி டோங்காவிற்கு கடனாக 100,000 டாலர் வழங்க சீனா முடிவு செய்துள்ளது. ஆம் கஷ்டத்தில் இருக்கும் டோங்காவிற்கு சீனா கடன் வழங்க போகிறது. சீனாவின் இந்த செயல் வெளியே பார்க்க நன்றாக இருந்தாலும் கடன் மூலம் அந்த குட்டி தீவை வளைத்து போடும் சீனாவின் "debt trap diplomacy" தான் இது என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த டோங்கா தீவு மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.

எங்கே இருக்கிறது
அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பசிபிக் கடலில் இந்த டோங்கா அமைந்துள்ளது. தனது எதிரிகளான ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் டோங்காவை எப்படியாவது கடன் கொடுத்து வளைத்து போட சீனா முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது இப்போது அவசரத்திற்கு கடன் கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் கடனை கொடுக்க முடியாத நேரத்தில் தீவில் கடற்படை தளம் அமைக்க இடம் கேட்பது, அவர்களின் கடலில் செயற்கை தீவு அமைக்க, ரோந்து செல்ல அனுமதி கேட்பது போன்ற வேலைகளை சீனா செய்யும் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

சீனா கடன்
சீனா இதற்கு முன்பே இது போன்ற வேலைகளை உலகம் முழுக்க செய்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கு கடன் கொடுத்து பின்னர் அவர்கள் கடனை திருப்பி கொடுக்க முடியாத போது அந்நாட்டில் ராணுவ தளம் அமைப்பது அல்லது வேறு ஒப்பந்தங்களை செய்வது போன்ற பணிகளை சீனா செய்து வருகிறது. இதற்கு சீனா வைத்து இருக்கும் வசீகரமான பெயர்தான் "debt trap diplomacy". அதாவது ஏழை நாடுகளிடம் வளர்ச்சி திட்டங்களுக்கு அல்லது அவசர பேரிடர் நிவாரண பணிகளுக்கு கடன் கொடுப்பது.. பல திட்டங்களை கடனுக்கு கொண்டு வருவது,, பின்னர் அந்த நாடுகள் கட்ட முடியாமல் தவிக்கும் போது அவர்களிடம் இருந்து முக்கிய சொத்துக்களை வாங்குவது அல்லது அந்த நாட்டையே மறைமுகமாக கட்டுப்படுத்துவது.

எத்தனை நாடுகள்
சீனாவின் இந்த சதியில் பல நாடுகள் சிக்கி உள்ளன. சீனாவிடம் கடன் வாங்கி மோசமாக அவதிப்படும் நாடு என்றால் இலங்கைதான். அந்த நாட்டில் கடன் நிதி சுமை ஏற்பட இதுவே காரணமாக அமைந்தது. அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. விலைவாசி மிக மோசமான உச்சத்தை அடைந்துள்ளது. இலங்கை பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் கடன் வாங்கி மிக மோசமான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இத்தனைக்கு சீனாவிற்கு பல சலுகைகள், தீவு அமைக்க இடம், ராணுவ தளவாடம் அமைக்க இடம் எல்லாம் கொடுத்தும் சீனாவின் கடனை இலங்கை அடைந்தபாடில்லை.

பாகிஸ்தான்
இன்னொரு பக்கம் பாகிஸ்தான் சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக 385 பில்லியன் டாலர் கடன் வாங்கியது பாகிஸ்தான் சீனாவிடம் கடன் வாங்கி பெரிய பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. கடந்த வருடம் மட்டும் 26 பில்லியன் ரூபாய் வட்டி மட்டும் கொடுத்துள்ளது. ஆனால் கடனை அடைக்க முடியாமல் சர்வதேச நிதியத்தின் கடன் வாங்கி இப்போது நாட்டில் விலைவாசியை உயர்த்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாண்டினீக்ரோ என்ற குட்டி நாட்டிற்கு சீனா சாலை பணிக்காக கடன் அளித்தது.

கடன் மேல் கடனை
வட்டி மேல் வட்டி போக நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது. அதாவது மொத்த நாட்டையும் விற்றாலும் கடன் அடைக்க முடியாது. இது பக்கம் இருக்க 2015ல் சீனாவின் Export-Import Bank மூலம் 200 மில்லியன் டாலரை உகாண்டா கடனாக வாங்கியது. இந்த நிலையில் கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் உகாண்டா விமான நிலையத்தை சீனா கைப்பற்ற உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

உகாண்டா
அதன்படி தற்போது உகாண்டா பிரதமர் யோவேரி முசவெனி தொலைக்காட்சியில் கண்ணீர் விடும் அளவிற்கு நிலைமை சென்றது. இதேபோல் லாவோஸ், தஜிகிஸ்தான் போன்ற மற்ற நாடுகளும் சீனாவின் வலையில் சிக்கி தவித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டோங்காவை இதேபோல் கடன் கொடுத்து.. உதவி செய்கிறேன் என்ற போர்வையில் ஆட்டிப்படைக்க சீனா முயல்வதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூகோள ரீதியாக டோங்கா முக்கியமான இடத்தில் இருப்பதால் சீனா இப்படி நல்லவர் போல நடித்து கடன் தர முயல்வதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications