பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல நீ.. சைலண்டாக வேலை பார்த்த ஈரான்.. கள்ள மெளனம் காக்கும் சீனா!
சென்னை: மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான போர் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த போர் இன்னும் பல வாரங்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் கூறியுள்ள நிலையில், உலக அரசியலில் முக்கிய சக்தியாக இருக்கும் சீனா இதுவரை பெரும்பாலும் மௌனமாகவே இருந்து வருகிறது.
ஈரான் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு சீனா வெளிப்படையான கடுமையான பதில் அளிக்காதது ஏன்? என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து அலசும்போது சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களே இந்த மௌனத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷியா இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இருக்கும் ஈரானில் மதப் புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே அந்த நாடு சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறது. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எதிரியாகக் கருதும் அரசியல் நிலைப்பாட்டை ஈரான் தொடர்ந்து வைத்திருக்கிறது.

ஈரான் போர்
இதனால் மத்திய கிழக்கில் உள்ள பல வளைகுடா நாடுகள் ஈரானுடன் எச்சரிக்கையாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவுடன் நல்லுறவை வைத்திருக்கும் வளைகுடா நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் அமெரிக்க ராணுவ தளங்களுக்கு அனுமதி அளித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் மீது ஈரானுக்கு எப்போதும் ஒரு அதிருப்தி நிலவிவருகிறது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் தொடங்கி தற்போது 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
சீனா மற்றும் ரஷ்யா
இந்த சூழலில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுக்கு சீனா மற்றும் ரஷ்யா மறைமுகமாக உதவி செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. உளவுத்துறை தகவல்கள், இராணுவ தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி போன்றவற்றை இந்த நாடுகள் வழங்குகின்றன என கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை சீனா மற்றும் ரஷ்யா நேரடியாக மறுத்ததாகவும் கூறப்படவில்லை.
கச்சா எண்ணெய்
அதே நேரத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். சீனாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 55 சதவீதத்துக்கும் அதிகமானவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் சுமார் 13 சதவீதம் ஈரானிலிருந்து மட்டுமே வருகிறது. இதனால் ஈரான் சீனாவுக்கு முக்கியமான எரிசக்தி வழங்கும் நாடாக மாறியுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை சீனா வாங்குகிறது. மேலும் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் வாய்ப்பு சீனாவுக்கு கிடைப்பதால் இது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்து சீனா, ஈரானிடமிருந்து 140 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான எண்ணெய் வாங்கியுள்ளது. அதே ஆண்டு, ஈரானின் எரிசக்தி, வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் 25 ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சீனா ஒப்பந்தம் செய்தது.
ZTE நிறுவனம்
இந்த பெரிய முதலீடுகள் காரணமாக அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை ஈரான் ஓரளவு சமாளிக்க முடிந்ததாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களும் ஈரானுடன் பல தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. 2010ஆம் ஆண்டு ஈரானின் அரசு நிர்வகிக்கும் தொலைபேசி மற்றும் இணைய நெட்வொர்க்குகளுக்கான கண்காணிப்பு அமைப்பை வழங்கும் 130 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சீனாவின் ZTE நிறுவனம் கையெழுத்திட்டது.
இராணுவ உதவி
அதேபோல், சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கவும் ஈரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு மட்டும் 17.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக 33.77 பில்லியன் டாலர் வரை அமெரிக்கா செலவிட்டுள்ளது. சீனாவின் பார்வையில் இது ஒரு முக்கிய அரசியல் கணக்காக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா அரசியல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா அதிக செலவு செய்வதால், மற்ற முக்கிய பிரச்சினைகளில் அதற்கு முழு கவனம் செலுத்த முடியாது என்ற நிலை உருவாகும். தைவானை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தைவானுக்கு அமெரிக்கா அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை வழங்கி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா அதிகமாக ஈடுபடுவது தைவான் தொடர்பான பிரச்சினையில் அமெரிக்காவின் கவனம் குறையக்கூடும் என சீனா கணக்கிட்டு பார்க்கிறது.
மத்திய கிழக்கு அரசியல்
இந்த அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணிகளின் பின்னணியில் பார்த்தால், மத்திய கிழக்கில் உள்ள மற்ற வளைகுடா நாடுகளை விட ஈரான் சீனாவுக்கு மிக முக்கியமான கூட்டாளியாக உள்ளது. எனவே, ஈரான் தொடர்பான இந்த போர் நிலைமையில் சீனா வெளிப்படையாக எந்த ஒரு பக்கத்தையும் தாக்காமல், மௌனமாக இருந்து சூழ்நிலையை கவனித்து வருகிறது என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications