"தூதுவர் மெஸ்சி.." சவுதி அரேபியாவிடம் வாங்கிய தொகை ரூ.21 கோடி.. அர்ஜென்டினா தோல்வியால் சர்ச்சை
தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் தலை சிறந்த கால்பந்து அணியான அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. சவூதி அரேபியாவின் வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் சூழலில் மெஸ்ஸி சவூதி அரேபியாவிடம் ரூ.21 கோடி பெற்றது ஏன்? விரிவாக காண்போம்
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் சி-யில் இடம்பெற்று இருக்கும் சவூதி அரேபியா மற்றும் உலகின் தலைசிறந்த கால்பந்து அணியான அர்ஜெண்டினா ஆகிய அணிகள் மோதின.
கால்பந்து தரவரிசையில் பின் தங்கி இருக்கும் சவூதி அரேபியாவிடம் அர்ஜெண்டினா அணி சாதனை வெற்றி பெறும் என்றே கால்பந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸி இதில் கலக்குவார் என உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மெஸ்ஸின் அடித்த முதல் கோல்
இவ்வளவு ஏன், சவூதி அரேபியாவில் கூட மெஸ்ஸிக்குதான் அதிக ஆதரவு இருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஆட்டம் தொடங்கிய நிலையில், 9 வது நிமிடத்திலேயே பெனாலிட்டி கிக் முறையில் மெஸ்ஸி முதல் கோலை விளாசினார். அதன் பிறகு உஷாரான சவூதி அரேபியா வலுவான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சவூதி அசத்தல் வெற்றி
அர்ஜெண்டினா அடித்த சில கோல்கள் ஆஃப் சைட் என நிராகரிக்கப்பட மறு பக்கம் சவூதியின் கோல் கீப்பர் முஹம்மது அல் ஒவைஸ் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி கடினமான கோல்களையும் வலைக்குள் விடாமல் நிறுத்தினார். இதற்கிடையே கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சவூதி அரேபியா 2 கோல்களை விளாசி வெற்றிபெற்றது.

சவூதியில் கோலாகல கொண்டாட்டம்
சவூதி அரேபியாவின் இந்த வெற்றி உலக கால்பந்து ரசிகர்களையே திரும்பிப்பார்க்க வைத்து இருக்கிறது. உலக கால்பந்து ஜாம்பவானான அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை சவூதி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஏதோ உலகக்கோப்பையையே வென்றதைபோல் சவூதி அரேபியா இன்று உள்நாட்டு விடுமுறை அறிவித்து உள்ளது.

ரூ.21 பெற்றாரா மெஸ்ஸி?
மறுபக்கம் அர்ஜெண்டினா அணியையும் அதன் கேப்டன் மெஸ்ஸியையும் அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் சவூதி அரேபிய சுற்றுலாவின் விளம்பர தூதுவராக மெஸ்ஸி நியமிக்கப்பட்டார். இதற்காக ஆண்டுக்கு ரூ.21 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

விசிட் சவூதி
நேற்று சமூக வலைதளங்களில் சவூதி அரேபியாவின் வெற்றி தொடர்பான பதிவுகள் அணி வகுக்க, அத்துடன் விசிட் சவூதி என்ற பக்கத்தில் சவூதி அரேபியாவின் விளம்பரத்தில் மெஸ்ஸி நடித்து இருக்கும் விளம்பர வீடியோவும் சேர்ந்து வந்தது. இதனை சுட்டிக்காட்டி அர்ஜெண்டினா ரசிகர்கள் மெஸ்ஸியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சவூதியின் விஷன் 2030
கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தை சவூதியுடன் போட்டபோதே மெஸ்ஸி மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. காரணம், விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வரும் சவூதி அரேபியா, அந்த ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை தொடரையும் சவூதி அரேபியாவில் நடத்த முடிவு செய்து அதன் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அர்ஜெண்டினாவின் திட்டம்
அதே ஆண்டு அர்ஜெண்டினாவும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை தங்கள் நாட்டில் நடத்த வைப்பதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்த சூழலில் சவூதி அரேபியாவின் விளம்பரத்தில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸியே நடிப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications