ஏனுங்க.. இந்த அம்மணி எப்படி பாம்பு பிடிக்குது பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடக்கு கரோலினா, அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி படு சாமர்த்தியமாக தலையணை உறையை வைத்து பாம்பு பிடித்த செயல் வைரல் ஆகியுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் சன்ஷைன் மெக்கர்ரி. வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர். இவர் தனது பேஸ்புக்கில் இந்த பாம்பு பிடிச் செயலின் வீடியோவாகப் போட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையைப் பெற்றுள்ளது. இவர் படு வேகமாகப் பிரபலமாகி விட்டார்.

பல்லிக்குப் பயப்படுபவர்களின் மத்தியில்

பல்லிக்குப் பயப்படுபவர்களின் மத்தியில்

நம்ம ஊரில் பல்லிக்குப் பயப்படுவோர் அதிகம் உள்ளன். குறிப்பாக பாத்ரூமில் பல்லி, கரப்பான் பூச்சியைப் பார்த்து விட்டால் வீலென்று அலறுவோர் அதிகம் உண்டு. ஆனால் இந்த மெக்கர்ரியின் செயல் அவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

லிவிங் ரூமில் பாம்பு

லிவிங் ரூமில் பாம்பு

மெக்கர்ரியின் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு ஒன்று லிவிங் ரூமுக்குள் புகுந்து விட்டது. நாற்காலிக்குக் கீழே சுற்றியபடி பதுங்கியிருந்தது. பாம்பைப் பிடிக்க முடிவு செய்த மெக்கர்ரிக்கு செம ஐடியா உதித்தது.

தலையணை உறையால்

தலையணை உறையால்

வீட்டில் இருந்த தலையணை உறையை எடுத்த மெக்கர்ரி அதைக் கொண்டு படு லாவகமாக, துணிச்சலாக பதுங்கிக் கிடந்த பாம்பைப் பிடித்து உள்ளே போட்டார். தலையணை உறைக்குள் போய்க் கொண்ட பாம்பு திமிறி வெளியே வர முயற்சிக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது.

செம ஹிட்

செம ஹிட்

பின்னர் இந்த பாம்பைக் கொண்டு போய் வெளியே விட்டு விட்டு வந்தார் மெக்கர்ரி. இந்த வீடியோ செம ஹிட்டாகியுள்ளது. இதுவரை இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையைப் பெற்றுள்ளது. 37,000 பேர் இதுவரை ஷேர் செய்துள்ளனர். 8000க்கும் மேற்பட்ட ரியாக்ஷனையும் இது பெற்றுள்ளது.

அடேங்கப்பா.. ரொம்பத்தான் தைரியமுங்க அம்மணி!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Woman catches snake in pillow cover
Please Wait while comments are loading...