கடவுளே எனக்கு கொரோனா வரனும்! ’சைனா மேக்’ மேல நம்பிக்கை இல்லை! வாண்டடாக வண்டியில் ஏறும் சீனர்கள்!
பீஜிங் : உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோன வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவில் கோரதாண்டவமாடி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்காக அந்நாட்டு இளைஞர்கள் விபரீத முடிவினை எடுத்து வருவதாகவும், இதனால் அங்கி நிலைமை படுமோசமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் கொரோனா
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

படுமோசம்
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் 20 நாட்களில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் கோரதாண்டவமாடி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்காக அந்நாட்டு இளைஞர்கள் விபரீத முடிவினை எடுத்து வருவதாகவும், இதனால் அங்கி நிலைமை படுமோசமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி தகவல்
அதாவது தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தரமானவை அல்ல என்ற அவநம்பிக்கையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக அவர்களே கொரோனாவை ஏற்றுக் கொண்டு வருவதாக பதைபதைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கொரோனா மற்றும் பிற காரணங்களால் சீனா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ சேவைகள் தரமற்றதாக உள்ளது. மேலும் அரசு சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கொரோனா தொற்று
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இளைஞர்கள் தாங்களாகவே நோய் தொற்றை வரவழைத்துக் கொள்வதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பால் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தப்படும் போது தங்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பரவும் என நம்புகிறார்கள். இந்த தகவல் தீயாய் பரவிய நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தாங்களாகவே கொரோனா தொற்றை வரவழைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களிடம் நெருங்கி பழகி கொரோனா தொற்றுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

மேலும் சிக்கல்
தங்கள் நாட்டின் தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் சீனர்கள். தற்போதைய சூழ்நிலையில் பிற நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அங்கு முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது நோய் எதிர்ப்பு சக்திக்காக இப்படி விபரீத முயற்சியில் ஈடுபட்டு வருவது சீனாவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications