ஆந்திரா எனது “தாய்வீடு”.. தமிழ்நாடு “மாமியார் வீடு”.. மாண்புமிகுவான நடிகை ரோஜா உருக்கம்!
காஞ்சிபுரம் : எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செல்வமணி கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் பிசியானவர் நடிகை ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வாக இருக்கும் நடிகை ரோஜா கடந்த முறையே அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடம் அளிக்கவில்லை.

அமைச்சர் ரோஜா
இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திர அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. மாநில தலைநகர் அமராவதியில் நடந்த விழாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவும் அமைச்சர் ஆனார். அவருக்கு சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.

தாய் வீடு, மாமியார் வீடு
இந்நிலையில், எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செல்வமணி கூறியுள்ளார். உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆந்திரா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அனைவருக்கும் நன்றி
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைத்ததற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிராத்தனை செய்தார்கள், அதே போல் தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு இங்கேயும் எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்,அதற்காக அனைவருக்கும் நன்றி,

கோவில்களில் பிரார்த்தனை
நான் முதல் படம் நடித்தது முதல் தற்பொழுது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன், என்னோட வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார், அதற்கு பிரார்த்தனையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளேன், எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் நான் தொடங்குவேன் , எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications