காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சும்மா வாயில் வடை சுடுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின்.. உங்க அப்பா சமாதியில் போய் கேளுங்க.. பாஜக வம்பு

Google Oneindia Tamil News

சென்னை: சமூக நீதி திராவிட பூமி என்றெல்லாம் வாயில் வடை சுடுவதை நிறுத்துவிட்டு பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கு டியரசுத்வி பி துரைசாமி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை குடியரசுத் தலைவர் பதவிக்காக இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

ஒருவர் பாஜகவை சேர்ந்த திரௌபதி முர்மு என்பவர். இன்னொரு எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா. இவர்கள் இருவரில் திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.

தலையை வெட்டிவிடுவோம்.. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் தலையை வெட்டிவிடுவோம்.. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

இரு வேட்பாளர்களில் யார்

இரு வேட்பாளர்களில் யார்

இந்த நிலையில் இரு வேட்பாளர்களில் திமுக யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் வாக்குண்டா ? நல்ல மனமுண்டா ? சமூகநீதி நோக்குண்டா..? இந்தியாவில் தற்போது ஒரு மாபெரும் புரட்சி நடைபெற்றிருக்கிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.

உயர் அதிகாரம்

உயர் அதிகாரம்

இந்தியாவின் உயர் அதிகாரம் மிக்க குடியரசு தலைவர் பதவிக்கு, முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த மலையக பெண்மணிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இரண்டாவது முறையாக ஒரு பெண்மணிக்கும். பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவருக்கு முதல்முறையாக குடியரசுத் தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல்

திராவிட மாடல்

திராவிட மாடல், திராவிட மாடல் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியல் இனத்தவருக்கும், குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் என்று தன்னை தானே வியந்து சொல்லிக் கொள்வது வழக்கம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, உங்களின் சமூக நீதிக் கொள்கையை நிரூபிக்க உங்களுக்கு அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மக்கள்

பிற்படுத்தப்பட்ட மக்கள்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பட்டியல் இனத்திற்காக பாடுபடுவோம் என்று வாயால் மட்டும் வடை சுட்டு கொண்டிருக்காமல், பட்டியல் இனத்தின் மலை சாதியினப் பெண்மணிக்கு வாக்களித்து உங்களின் சமூகநீதியை நிலைநாட்டி காட்டவேண்டும். தாங்கள் பெரியாரின் நினைவிடத்திற்கு வேண்டுமானால் ஒரு முறை சென்று வாருங்கள். அண்ணாவின் நினைவிடத்திலும் அரைமணி நேரம் சென்று வாருங்கள். ஏன் கலைஞரின் நினைவிடத்திலும் சென்று கேட்டுப் பாருங்கள். சமூக நீதி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள்.

பெரியார் அண்ணா

பெரியார் அண்ணா


பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் வெறும் பேச்சினால் சொல்லிக் கொண்டிருந்ததை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவர்களுக்கு உயர் பதவி வழங்கி உண்மையான சமூக நீதியை நிலைநாட்டி நிரூபித்திருக்கிறார். அண்ணல் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் சிறுபான்மை இனத்தவரான அப்துல் கலாம் அவர்களுக்கு குடியரசுத்தலைவராக பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது இந்தியாவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பட்டியலின மக்களுக்காகவும் அதிகமாக குரல் கொடுக்கும் மாநிலம் தமிழகம் என்று உரத்த குரலில் உச்சரித்தால் மட்டும் போதுமா? நடைமுறையில் அதை நீங்கள் செய்து காட்ட வேண்டாமா?

சமூகநீதி காப்பாளர்

சமூகநீதி காப்பாளர்

சமூகநீதி காப்பாளர் என்ற பட்டங்கள் மட்டும் சூட்டிக்கொண்டால் மட்டும் போதாது. அதை செயலில் நிரூபித்துக் காட்ட வேண்டும். உங்களுக்கு அருமையான வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி வழங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கப் போவது, ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்மணிக்கா? அல்லது உயர்ஜாதி இனத்தவருக்கா? என்பதை நீங்களும் உங்கள் கூட்டணி கட்சியினரும் முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் கட்சியின் சமூக நீதி என்பது நிஜமா போலியா என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். மக்களும் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் காப்பது சமூக நீதியா? அல்லது நீங்கள் வெறும் சந்தர்ப்பவாதியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
BJP V.P.Duraisamy says that Stalin should give support to Draupadi Murmu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X