கன்னியாகுமரியில் கவிதா.. அண்ணினு கூட நினைக்கல.. கார் ரூட்டை திருப்பிய மச்சினன்.. சிதறி விழுந்த மீன்கள்
கன்னியாகுமரி: புதுக்கடை அருகே பணம், நகைக்கு ஆசைப்பட்டு தனது அண்ணியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை அருகே உள்ளது முள்ளங்கினாவிளை என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த தம்பதியினர் ஜோஸ் - கவிதா.. ஜோஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.. 25 வயதான கவிதா, முள்ளங்கினாவிளையிலும், பூட்டேற்றியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார்.

இதனிடையே, குடும்ப தேவைக்காக தன்னுடைய நகைகளை கவிதா, தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்திருந்தார்.. இந்த நகைக்கான வட்டியை, வெளிநாட்டிலிருந்து ஜோஸ் அனுப்பி வைத்துவிடுவார்.. இந்த வட்டி பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அவ்வப்போது செலுத்திவிட்டு வருவார் கவிதா.
கவிதா: இந்த விஷயம், ஜோஸின் தம்பி சசிகுமாருக்கு தெரிந்துவிட்டது.. எப்படியாவது, கவிதாவிடமிருந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்... சிறுக சிறுக வட்டி கட்டிவந்த நிலையில், கடந்த 2011, டிசம்பர் 2ம் தேதி, மொத்த நகையையும் வங்கியிலிருந்து முழுமையாக திருப்பிவிட்டார் கவிதா..
மீட்கப்பட்ட நகைகள், மற்றும் பணத்துடன், பூட்டேற்றியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்வதற்காக கருங்கல் மார்க்கெட்டில், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்... அந்த நேரம்பார்த்து காரில் அங்கே வந்த சசிக்குமார், அண்ணி கவிதாவிடம் பேச்சு கொடுத்தார்.. அம்மா வீட்டில் தானே கொண்டுபோய்விடுவதாக சொல்லி கவிதாவை காரில் ஏற்றி கொண்டார்.. உடனே கவிதாவும், தன்னுடைய அம்மாவுக்கு போனை போட்டு சசிக்குமாருடன் காரில் வந்துகொண்டிருப்பதாக தகவல் சொன்னார்.
நாகர்கோவில்: ஆனால் சசிக்குமார் பூட்டேற்றி செல்லாமல், நாகர்கோவில் நோக்கி வண்டியை திருப்பினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, தன்னை எங்கே அழைத்து செல்கிறாய்? என்று கேட்டு சசிக்குமாருடன் தகராறு செய்துள்ளார். அப்போது சசிக்குமார் கவிதாவை தாக்கி, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.. இதற்கு கவிதா உடன்படாததால் அவரது கழுத்தை நெரித்து, தலையை பலமாக இடித்து தாக்கினார். இதில் கவிதா உயிரிழந்தார்.
பிறகு அவரது நகை, பணத்தை எடுத்துக் கொண்டு, கவிதாவின் உடலை ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி சுடுகாட்டு பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் சசிக்குமார்.
மீன்கள்: இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவலறிந்து சென்ற ஆரல்வாய்மொழி போலீசார், கவிதா மார்க்கெட்டில் வாங்கின காய்கறிகள், மீன்கள் எல்லாமே, அவரது சடலத்தின் அருகே விழுந்து கிடப்பதை கண்டனர். இறுதியில், சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இதுநாள்வரை நாகர்கோவில் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தனர்.. தேவையான ஆதாரங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன..
அண்ணி: இந்த வழக்கில் கிடைத்த சில தடயங்களும் விசாரணைக்கு பேருதவியாக அமைந்தன. இறுதியில், நீதிபதி சுந்தரய்யா இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு தந்துள்ளார்.. அதன்படி, சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 13 வருடம் கழித்து, அண்ணியை கொன்ற மச்சினருக்கு கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications