பொங்கல் பரிசு தொகுப்பு வெல்லத்தில் கிடந்த ஊசி.. அப்படியே ஷாக்கான பொதுமக்கள்.. எங்கே தவறு நிகழ்ந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான வெல்லத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிறிஞ்ச் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தொடர் புகார்கள்
டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிடபட்டு இருக்கும் நாளில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம். சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக சட்டமன்றத்திலும் அதிமுக புகார் கூறியது. இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கும் வந்தது.

முதல்வர் உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும் தரமான பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தரமான பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

வெல்லத்தில் ஊசி
இதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு பொருட்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான வெல்லத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிறிஞ்ச் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் மூன்று தினங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி உள்ளார் அதில் அவருக்கு 21 பொருட்களுக்கு பதிலாக 17 பொருட்கள் மட்டுமே கடை ஊழியர் வழங்கி உள்ளதாக தெரிகிறது. நேற்று பொங்கல் வைப்பதற்காக ரேசன் கடையில் கிடைத்த வெல்லத்தை எடுத்து பொடி செய்ய முயன்றுள்ளார். அப்போது வெட்டுகத்தியால் வெல்லத்தை இரண்டாக பிளந்தபோது அதனுள் பெரிய அளவிலான மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிறிஞ்ச் ஒன்று இருந்துள்ளது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரி தனது மகள்களிடம் தெரிவித்து உள்ளார்.

எங்கே தவறு நிகழ்ந்தது?
உடனே அந்த பொருட்களை வீட்டின் ஒரு ஓரத்தில் கொட்டி வைத்துவிட்டு ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டுள்ளார் அவரும் அதனை உறுதிசெய்ய நேரடியாக ஜெயகுமாரியின் வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளார் அப்போது அங்கு ஊசி சிறிஞ்சுடன் இருந்த வெல்லத்தை கண்டு உணவுப்பொருள் பாதுக்காப்பு துறை அதிகாரிகள் மற்றும் வட்டவழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து கூறி உள்ளார் ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்வையிடாமல் மெத்தன போக்காக இருப்பதாக கூறப்படுகிறது. வெல்லம் தயாரிக்கும் இடத்தில் வெல்ல பாகில் தவறுதலாக ஊசி சிறிஞ்சு விழுந்து இருக்கலாம் என்றும் இதனை அப்போதே கவனிக்காமல் விட்டுள்ளனர் என்று பொதுமக்கள் சிலர் கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications