Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேச ஒற்றுமை பயணம்..! ராகுலுடன் கைகோர்த்து நடக்கும் 118 இளைஞர்கள்! இப்படியா செலக்ட் பண்ணாங்க?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தேச ஒற்றுமை நடைபயண யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்க உள்ளார். ராகுல் காந்தியுடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் கடைசி வரை பயணிக் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் 'பாரத் ஜோடோ யாத்ரா' நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் என 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடை பயணத்தில், 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, இறுதியில் காஷ்மீரில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.

தமிழகம் வந்தார் ராகுல்

தமிழகம் வந்தார் ராகுல்


நடைபயணத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி, சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து, அங்கு ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராஜீவ் தியாக பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜீவ் காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார்.

கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரியில் தொடங்க உள்ள நடைபயணத்திற்காக ராகுல் காந்தி இன்று மாலை கன்னியாகுமரிக்கு வரவுள்ளார். இன்று இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலந்துகொண்டு, தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், பொதுக்கூட்டத்தில் திரண்டிருக்கும் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரை நிகழ்த்த உள்ளார். ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தையொட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.

கன்னியாகுரில் 4 நாட்கள் பயணம்

கன்னியாகுரில் 4 நாட்கள் பயணம்


பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரியில் ராகுல்காந்தி தங்குகிறார். நாளை அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், டெரிக் சந்திப்பு வழியாக நடைபயண்ம் மேற்கொண்டு, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியில் தங்குகிறார். 9-ம் தேதி, சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, தக்கலை வழியாக முளகுமூடு செயின்ட் மேரீஸ் பள்ளியில் தங்குகிறார். 10-ம் தேதி, சாமியார்மடம், சிராயன்குழி, மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் போது வழியில் மக்களை சந்திக்கவும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கன்னியாகுமரியில் பாதுகாப்பு

கன்னியாகுமரியில் பாதுகாப்பு

கன்னியாகுமரிக்கு முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி வருகையையொட்டி ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், பாதுகாப்பு பணிகளில் 2500 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் நடை பயணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடல் பகுதிகள் கடற்கரை பீச் பகுதிகள் உள்ளிட்ட கன்னியாகுமரி முழுவதும் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் சோதனைகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது.

118 இளைஞர்கள் தேர்வு

118 இளைஞர்கள் தேர்வு

ராகுல் காந்தியுடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் கடைசி வரை பயணிக்கின்றனர். உடல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த விஜேந்திர சிங்கிற்கு மட்டும் 58 வயதாகிறது. மற்றவர்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், மகளிர் காங்கிரஸை சேர்ந்த 28 பெண் தொண்டர்களும் பங்கேற்கின்றனர். இதுதவிர எந்த மாநிலத்தில் நடைபயணம் செல்கிறதோ, அந்த மாநில எல்லை வரை உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் ராகுல் காந்தியுடன் செல்கின்றனர்.

 நடைபயணம் - வசதிகள்

நடைபயணம் - வசதிகள்


ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் ஈடுபடுபவர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நடைபயணத்தின் பொது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பக் குழுவிர், முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+